Published:Updated:

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை: கழுத்தில் கால்வைத்து நசுக்கிய முன்னாள் காவலர் குற்றவாளி! - நீதிமன்றம் அதிரடி

ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்த சாவின், இனரீதியாக வேறுபட்டிருந்த ஏழு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்களை நீதிபதியாகக்கொண்ட அமர்வு மூலம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அமெரிக்க காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் காவல் அதிகாரி டெரேக் சாவின், ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட்டைக் கொலை செய்தது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுவரும் நீதிமன்றம், டெரேக் சாவினை இரண்டாம் நிலை கொலை, மூன்றாம் நிலை கொலை மற்றும் படுகொலை செய்வது என்ற மூன்று பிரிவுகளின் கீழ் குற்றவாளி என அறிவித்துள்ளது.

கடந்த வருடம், மே மாதம் அமெரிக்காவிலுள்ள மின்னியாபொலிஸ் நகரில், கள்ள நோட்டு மாற்றினார் என்ற குற்றச்சாட்டு சம்பந்தமாக ஆப்பிரிக்க - அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்டை மின்னியாபொலிஸ் நகர காவல்துறையைச் சேர்ந்த நான்கு காவலர்கள் கைதுசெய்தனர். அப்போது காவல்துறை வாகனத்தில் ஏற மறுத்த ஜார்ஜை காவல் அதிகாரி ஒருவர், கழுத்தில் தன் முட்டிக் காலால் அழுத்திப் பிடித்தார். அப்போது, `என்னால் மூச்சுவிட முடியவில்லை’ என்று ஜார்ஜ் கூறிய கடைசி வார்த்தைகள், காணொலியாக சமூக வலைதளங்களில் வெளியாகி, இனவெறிக்கு எதிரான போராட்டதுக்கு வழிவகுத்தது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை: கழுத்தில் கால்வைத்து நசுக்கிய முன்னாள் காவலர் குற்றவாளி! - நீதிமன்றம் அதிரடி

இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் பணி நீக்கம் செய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டனர். இதில் 45 வயதான சாவினிடம் 11 மணி நேர விசாரணை நடத்தப்பட்டு, இரண்டாம் நிலை கொலை, மூன்றாம் நிலை கொலை மற்றும் படுகொலை என்ற பிரிவின் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

மூன்று வார விசாரணைக்குப் பின்னர் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டபோது மின்னியாபொலீஸ் நகர நீதிமன்றத்தின் முன் கூடியிருந்த மக்கள் உற்சாகமடைந்தனர்.

ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்த சாவின், இனரீதியாக வேறுபட்டிருந்த ஏழு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்களை நீதிபதியாகக்கொண்ட அமர்வு மூலம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அவர் கையில் விலங்கு மாட்டப்பட்டது.

அதன் பின் மாஸ்க் அணிவிக்கப்பட்டு, நீதிமன்றத்திliருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். இந்த அறிவிப்பைக் கேட்ட ஜார்ஜின் சகோதரர் நீதிமன்றதுக்கு நன்றியைத் தெரிவித்தார். தண்டனை விவரங்கள் பின்னாளில் அறிவிக்கப்படும் எனக் கூறிய நிலையில் 40 வருடங்கள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணை தொடங்கியது முதல் வெளியுலகிலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர். அதாவது வெளியில் நடப்பவை இவர்களுக்குத் தெரியாது. திறப்பு அறிவிக்கும் வரை வீடுகளுக்குக்கூட செல்ல முடியாது. விடுதியில்தான் தங்க வேண்டும். முக்கியமான வழக்கு என்பதால், வெளியில் நடக்கும் சம்பவங்கள் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தீர்ப்புக்கு முன்னதாக அமெரிக்கா முழுவதுமுள்ள நகரங்களில் பதற்றமான சூழல் காணப்பட்டது, மின்னியாபொலிஸ் நகரில் காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

நீதிமன்றத்துக்கு வெளியே
நீதிமன்றத்துக்கு வெளியே

தீர்ப்புக்குப் பின் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜார்ஜ் குடும்பத்தை அழைத்து `குறைந்தபட்சம் இப்போது கொஞ்சம் நீதி கிடைத்துள்ளது. அமைப்புரீதியான இனவெறியைக் கையாள்வதில் இது முதல் அடியாக இருக்கும்' என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துணை அதிபரான கமலா ஹாரிஸ், ``இது அமெரிக்காவின் நீதிக்கான நாள், வரலாறு இதைத் திரும்பிப் பார்க்கும்” என்றார்.

இந்தத் தீர்ப்பை சிவில் உரிமைகளுக்கான ஒரு முக்கிய வெற்றியாகவும், சிறுபான்மையினருடனான நடவடிக்கைகளில் காவல்துறையினரைச் சீர்ப்படுத்துவதற்கான சட்டத்தை ஊக்குவிப்பதாகவும் ஜார்ஜ் குடும்ப வழக்கறிஞர் பென் கிரம்ப் கூறினார். இந்தத் தீர்ப்பு வரலாற்றில் ஒரு திருப்புமுனை. ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கான இந்த நீதி என்பது அமெரிக்க மக்கள் அனைவருக்குமான நீதி என ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபரான பராக் ஒபாமா, `ஒரு நடுவர் சரியானதைச் செய்தார். ஆனால் உண்மையான நீதிக்கு இன்னும் நிறையவே தேவைப்படுகிறது’ என்று கூறியுள்ளார்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட்
ஜார்ஜ் ஃப்ளாய்ட்

ஜார்ஜ் வழக்கில் தொடர்புடைய மீதமுளள மூன்று முன்னாள் காவல்துறையைச் சேர்ந்தவர்களின் விசாரணை இந்த ஆண்டு இறுதிக்குள் வரவிருக்கிறது.

முன்னதாக ஜார்ஜ்க்கு இதயநோயால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மற்றும் சட்டவிரோத போதை மருந்துகளால்தான் இறந்தார் என ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணர் கூறினார். ஆனால் சாவின் முழங்காலால் ஜார்ஜ் கழுத்தை அமுக்கியபோது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு அவர் இறந்தார் என அரசு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

வழக்கு விசாரணைக்குச் சாட்சியளித்த 38 சாட்சிகளில் ஜார்ஜ் கைதுசெய்யப்பட்டத்தை கவனித்த பார்வையாளர்களில் சிலர் அவரை விட்டுவிடும்படி சாவினிடம் மன்றாடி உள்ளனர். சமூக வலைதளங்களில் பதிவான அந்தக் காணொலியை எடுத்த இளைஞரான டார்னேல்லா பிரேசியர், `ஜார்ஜ் பயப்பட்டார்’ என்றும், அவர் `என் உயிரை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினார்’ என்றும் கூறுகிறார். மேலும், `அவர் மிகக் கஷ்டப்பட்டார்’ எனவும் கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு