Published:Updated:

இலங்கை: ``நான் ராஜினாமா செய்யப் போவதில்லை..!" - பிரதமர் மகிந்த ராஜபக்சே திட்டவட்டம்

மகிந்த ராஜபக்சே

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், `நான் என் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்..' என இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை: ``நான் ராஜினாமா செய்யப் போவதில்லை..!" - பிரதமர் மகிந்த ராஜபக்சே திட்டவட்டம்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், `நான் என் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்..' என இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
மகிந்த ராஜபக்சே

இலங்கையில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதன் காரணமாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்திவருகின்றனர். விலைவாசி அதிகரித்து வருவதால், மக்கள் வாழ்வாதாரம் இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக நிதி உதவி கோரி பல்வேறு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ராஜபக்சே அரசின் இயலாமையால் மக்கள் வீதிக்கு வந்து விட்டார்கள் என பல்வேறு தலைவர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் ஒரு குழுவினர் ராஜபக்சேவை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். மேலும் மீண்டும் அவரை பதவியில் நீடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

மகிந்த ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே

இந்த நிலையில், கொழும்பில் ஆளும் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதமர் ராஜபக்சே பேசினார். அப்போது அவர், ``நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையின் பின்னாலும் நான் நிற்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்து வருகிறோம். உலக வங்கி, மற்றும் நட்பு நாடுகள் இந்த நேரத்தில் நமக்கு உதவ முன் வந்துள்ளன. நான் ராஜினாமா செய்ய வேண்டாம் என்று நீங்கள் ஒரு கோரிக்கை வைத்தீர்கள். நீங்கள் பயப்பட வேண்டாம்... நான் ராஜினாமா செய்ய மாட்டேன்’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism