Published:Updated:

ட்ரம்ப்பின் அதிகார வளையம்; குடும்பம் ஏன் உள்ளே நுழைந்தது? ஓர் உலகம், ஓர் அதிபர், ஒரேயொரு ட்ரம்ப் - 5

Donald Trump ( Tia Dufour/The White House via AP )

ட்ரம்ப்பின் மகள் என்ற ஒரே காரணத்திலேயே சுலபமாக அதிபரின் தலைமை ஆலோசகரானார் இவாங்கா ட்ரம்ப். பெண்கள் முன்னேற்றம் சார்ந்த திட்டங்களுக்கு இவாங்காவை முன்னிறுத்த ஆரம்பித்தார் ட்ரம்ப்.

ட்ரம்ப்பின் அதிகார வளையம்; குடும்பம் ஏன் உள்ளே நுழைந்தது? ஓர் உலகம், ஓர் அதிபர், ஒரேயொரு ட்ரம்ப் - 5

ட்ரம்ப்பின் மகள் என்ற ஒரே காரணத்திலேயே சுலபமாக அதிபரின் தலைமை ஆலோசகரானார் இவாங்கா ட்ரம்ப். பெண்கள் முன்னேற்றம் சார்ந்த திட்டங்களுக்கு இவாங்காவை முன்னிறுத்த ஆரம்பித்தார் ட்ரம்ப்.

Published:Updated:
Donald Trump ( Tia Dufour/The White House via AP )
அதிபர் தேர்தல் நவம்பரிலேயே நடந்து முடிந்து, ரிசல்ட்டும் உடனே வெளியிட்டாலும் ஆட்சி பொறுப்பேற்கும் நாள் மட்டும் இரண்டு மாதம் கழித்து ஜனவரி 20 என்பதைச் சம்பிரதாயமாகக் கொண்டுள்ளது அமெரிக்காவின் சட்டத் திருத்தம்.

ஒவ்வொரு ஆண்டும் அரசின் செயல்பாடுகளை ஆராய டிசம்பரில் காங்கிரஸ் கூட்டம் கூடுவதால் இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், அதற்கெல்லாம் ட்ரம்ப் பொறுக்கவில்லை. அரசு அதிகாரத்தில் தன் மனநிலை சார்ந்து தனக்கு யாரெல்லாம் சரிப்பட்டு வருவார்களோ அவர்களைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். ட்ரம்ப் பிரசாரத்தின் இரு கண்களாகப் பாதுகாப்பும் பொருளாதாரமும் இருந்தது. அதிலிருந்தே தொடங்கினார்.

Trump
Trump
Evan Vucci

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ட்ரம்ப்பின் முதல் தேர்வு ஜாக் கென் (Jack Kane). 73 வயதான ஒய்வுப்பெற்ற நான்கு நட்சத்திர ராணுவ ஜெனரல். டிக் சென்னி (Dick Chenney) துணை அதிபராக இருந்தபோது அவருக்கு ஆலோசகராக இருந்தார். பாதுகாப்பு செயலாளர் பொறுப்புக்கு கென்னை வற்புறுத்தினார் ட்ரம்ப். ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக ட்ரம்ப்பின் அழைப்பை மறுத்த கென், பாதுகாப்புத் துறைசார்ந்த அனைத்து அறிவுரைகளையும் வழங்கினார். கூடவே கென் பரிந்துரைத்த ஜிம் மாட்டிஸ்தான் (Jim Mattis) ட்ரம்ப் அரசின் பாதுகாப்பு செயலாளராகப் பொறுப்பேற்றார். மாட்டிஸ் ஒய்வுபெற்ற நான்கு நட்சத்திர மெரைன் ஜெனரல். இறுதியாக, மத்திய கிழக்கில் ஜெனரல் கமாண்டராக இருந்து 2013-ல் ஓய்வுபெற்றவர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாதுகாப்பு செயல்களில் ஒபாமாவின் அரசின் மீது அதிருப்தி கொண்டவர் மாட்டிஸ். குறிப்பாக, மத்திய கிழக்கில் ராணுவத்தைக் கையாளும் விதம், ஈரானுடனான உறவு போன்றவற்றில் மாட்டிஸுக்கு உடன்பாடில்லை. மத்திய கிழக்கில் அதிகளவில் ராணுவ வலிமையை அமெரிக்கா கையாள வேண்டும் என நினைத்தார். ட்ரம்ப்பின் நிலைப்பாடும் அதுதான். தேர்தல் பிரசாரத்திலேயே ஐஎஸ்ஐஎஸ்-சை அழிப்பேன் என வாக்குறுதி கொடுத்தார். இஸ்லாமிய நாடுகளில் பயங்கரவாதத்தைத் தடுத்து ஐஎஸ்ஐஎஸ் இடமிருந்து உலகைப் பாதுகாக்க வேண்டும். தீவிரவாதிகளின் கைகோத்து சிரியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் ஈரானின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதே ட்ரம்ப்பின் லட்சியம். "தற்போதைய முறையை முற்றிலும் மாற்றி, நமது போர் வெறும் போராக இல்லாமல் மொத்த எதிரிகளையும் நிர்மூலமாக்கும்" என்ற தீவிர போர் சிந்தனை கொண்ட மாட்டிஸின் வாக்குறுதி ட்ரம்ப்பை மிகவும் கவர்ந்தது.

Gary Cohn
Gary Cohn
Remy Steinegger | World Economic Forum, CC BY-SA 2.0 , via Wikimedia Commons

ட்ரம்ப் அரசில் அதிக முக்கியத்துவம் பெற்றவர்களின் ஒருவராக இருந்தவர் தேசிய நிதி கழகத்தின் இயக்குநர் கேரி கோன் (Gary Cohn). கேரியும் ட்ரம்ப்பைப் போல பிசினஸ்மேன். ஜனநாயக கட்சியைச் சார்ந்தவர் என்றாலும், நன்கொடை விஷயத்தில் பாகுபாடு காட்டாதவர். கட்சி பேதம் இருந்தாலும், இனம் இனத்தோடு சேரும் என்ற பொது அறிவியல் அடிப்படையில் கேரிக்கு பொறுப்பு கொடுத்தார் ட்ரம்ப். இவர்களால் 2017-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'வரி மறுசீரமைப்பு' சட்டத்திருத்தம் நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது. பெரு நிறுவனங்களின் வரியைக் குறைப்பதுதான் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்று வெளிப்படையாக அறிவித்தவர் ட்ரம்ப். ஆதலால், பெரு நிறுவனம், எஸ்டேட் நிர்வாகம் மற்றும் தனிநபர்களுக்கான வரி குறைப்பு, குடும்பங்கள் மற்றும் கடன்களுக்கான வரி உயர்வு போன்ற அம்சங்களை உள்ளடக்கிய 'பிசினஸ்மேன் அதிபரின்' வரி சீரமைப்பிற்கு ஆச்சர்யப்பட ஒன்றுமிருக்காது. கேரியின் உலகமய வர்த்தக பார்வை ட்ரம்ப்பின் தேசிய பார்வையிலிருந்து முரண்பட்டது. அதனாலேயே பன்னாட்டு ஏற்றுமதிக்குக் கூடுதல் வரி விதிப்பதை எதிர்த்து 2018-ல் வெளியேறினார் கேரி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரெயின்ஸ் ப்ரீபஸ் (Reince Priebus) வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி. ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பங்காற்றியவர். இளவயதிலேயே குடியரசு கட்சி தேசிய கமிட்டியின் சேர்மனாக தேர்வானவர். ஆரம்பத்தில், ட்ரம்ப் குடியரசு கட்சியின் முதன்மையானோர்களில் ஒருவராக இடம்பெறுவதையே எதிர்த்தார் ப்ரீபஸ். ஆனால், கட்சியின் நிர்ப்பந்தத்தின் காரணமாக அவரே ட்ரம்ப்பை ஆதரித்து பிரசாரம் செய்தார். அதிகாரம் பெற்றவுடன், தேர்தல் பிரசாரத்தின் மீதான ரஷ்யத் தலையீட்டுக் குற்றச்சாட்டின் விசாரணையை மழுங்கடிப்பதில் அத்தனை வழிகளையும் கையாண்டார்.

Steve Bannon
Steve Bannon
Gage Skidmore from Peoria, AZ, United States of America, CC BY-SA 2.0 , via Wikimedia Commons

ஸ்டீவ் பேனோன் (Steve Bannon) பலரும் நன்கு அறிந்தவர். ட்ரம்ப் பிரசாரத்தின் தலைமை செயல் அதிகாரி, பிறகு வெள்ளை மாளிகையின் தலைமை திட்ட அலுவலர். ட்ரம்ப் தேர்தல் சர்ச்சையில் முக்கிய பங்கு வகித்த 'கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா' நிறுவனத்தின் பிரமுகர். ட்ரம்ப்பை போலவே சிறுபான்மையினர் மற்றும் ஊடகங்களுக்கு எதிரான ஒவ்வாமை கொண்டவர். குறிப்பிட்ட இஸ்லாமிய நாட்டவர்கள் அமெரிக்கா வர இடைக்காலத் தடை விதித்ததில் பேனோனின் ஆதிக்கம் அதிகம். 'தற்போது உலகிலேயே மிகப்பெரிய செல்வாக்குடையவர்' என்று பேனோனின் அட்டைப்படக் கட்டுரையை 2017 பிப்ரவரியில் வெளியிட்டது 'டைம்' இதழ்.

இவாங்கா ட்ரம்ப்...

ட்ரம்ப்பின் மகள் என்ற ஒரே காரணத்திலேயே சுலபமாக அதிபரின் தலைமை ஆலோசகரானார். பெண்கள் முன்னேற்றம் சார்ந்த திட்டங்களுக்கு இவாங்காவை முன்னிறுத்த ஆரம்பித்தார் ட்ரம்ப். தொடர்ந்து வெளிநாடுகளில் பயணம் செய்வதன் மூலம் இவாங்காவின் இமேஜை உயர்த்தும் வேலைகள் நடைபெற்றது. 2017-ம் ஆண்டு நடந்த உலகளாவிய பெண்கள் முன்னேற்ற மாநாட்டிற்கு இந்தியாவிற்கு வருகைதந்த இவாங்கா இங்கு முக்கிய பேசுபொருளானதை அறிவோம். "அடுத்த அதிபராவதற்கான அனைத்து வேலைகளுக்கும் தயாராகிறார் இவாங்கா'' என்பதுதான் ஊடகங்களின் பார்வை.

Ivanka Trump
Ivanka Trump
www.instagram.com/ivankatrump

தனது மருமகன் (இவாங்காவின் கணவர்) ஜேர்ட் குஷ்னரை (Jared Kushnar) தலைமை ஆலோசகராக ட்ரம்ப் நியமித்தது பலரின் கோபத்தையும் தூண்டியது. அரசியலில் தனது குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறார் என ஊடகங்கள் விமர்சித்தன. ட்ரம்ப் பிரசாரத்தின் டிஜிட்டல் மீடியா பங்களிப்பிற்கு ஜேர்ட்தான் பொறுப்பு. ட்ரம்ப் பிரசாரத்தின் புதுவித டிஜிட்டல் பாப்புலிசத்திற்கு ஜேர்டின் பங்களிப்பு பெரிது. அதுமட்டுமல்ல, தனது டிஜிட்டல் பிரசாரத்திற்கு பேனோன் மூலம் 'கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா' பங்களிப்பை நாடியவர் ஜேர்ட்தான்.

பிரசாரத்திலும் சரி, அதிகாரம் அமைப்பதிலும் சரி ட்ரம்ப்பின் தேர்வில் ஜேர்டின் தலையீடு இருந்தது என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். ஆட்சியில் பாதுகாப்புத்துறை முழுவதையும் ட்ரம்ப்பின் ஆசியுடன் தனது கட்டுப்பாட்டிற்குள் செயல்படுத்தினார் ஜேர்ட். பல வெளியுறவு விவகாரங்களிலும் தலையிட்டார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் சென்று அதிபர்களைச் சந்தித்து அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தினார். ஜேர்ட் அடிப்படையில் ஒரு யூதர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trump
Trump
Alex Brandon
மேற்கூறிய ட்ரம்ப்பின் அதிகார வளையம், பிரசாரம் முதல் தனிப்பட்ட மனநிலை வரை ட்ரம்ப்போடு அனைத்து விதங்களில் உடன்பட்டவர்கள். ட்ரம்ப் என்ற வெளிப்படையான விமர்சன அரசு உருவாவதில் அஸ்திவாரமாக இருந்தவர்கள். ஆனால், ட்ரம்ப்பின் குடும்பம் தவிர மற்ற யாரும் இப்போது அவர்கள் பதவியில் இல்லை. அதுதான் ட்ரம்ப். தன் மனசாட்சியாக இருந்தவர்களுடனேயே ட்ரம்ப்பால் தொடர முடியவில்லை. நாம் நினைக்கும் எந்த வரையறுக்கும் உட்படாதவர் ட்ரம்ப் என்பதற்கு இது ஓர் உதாரணம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism