Published:Updated:

ட்ரம்ப் மீது பதவிநீக்க விசாரணை... பறிபோகுமா அதிபர் பதவி?

ட்ரம்ப்
பிரீமியம் ஸ்டோரி
ட்ரம்ப்

உக்ரைன் பேரம் உருவாக்கிய சிக்கல்...

ட்ரம்ப் மீது பதவிநீக்க விசாரணை... பறிபோகுமா அதிபர் பதவி?

உக்ரைன் பேரம் உருவாக்கிய சிக்கல்...

Published:Updated:
ட்ரம்ப்
பிரீமியம் ஸ்டோரி
ட்ரம்ப்

மெரிக்க அதிபர் ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி இடையே நடந்த தொலைபேசி உரையாடல், அமெரிக்க அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கிறது. உக்ரைன் அதிபருக்கு நெருக்கடி கொடுக்கும்விதமாக ட்ரம்ப் பேசினார் என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர்மீது அரிதாக கொண்டுவரப்படும் பதவி நீக்க விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை. இதனால், ட்ரம்ப்பின் அதிபர் பதவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது!

கடந்த ஜூலை 25-ம் தேதி, உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கியுடன் போனில் பேசினார் ட்ரம்ப். அப்போது செலன்ஸ்கியிடம் ட்ரம்ப் தெரிவித்ததாக வெளியாகியிருக்கும் தகவல்கள்தான் சர்ச்சையைக் கொளுத்திப்போட்டிருக்கின்றன. இதை முன்வைத்து, ட்ரம்ப்புக்கு எதிராகக் களத்தில் குதித்திருக்கிறார் அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரும் ஜனநாயகக் கட்சித் தலைவருமான ஜோ பைடன். ஏற்கெனவே, ஜோ பைடனுக்கும் ட்ரம்ப்புக்கும் ஆகாது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உக்ரைனில் எரிவாயு நிறுவனம் ஒன்றில் இயக்குநராக இருக்கிறார் ஜோ பைடனின் மகன் ஹன்டர். இவர், தன் தந்தையின் பதவியால் பலன் அடைந்ததாக புகார் இருக்கிறது. இந்த நிலையில்தான் உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா வழங்கிவந்த 391 மில்லியன் டாலர் நிதி உதவி திடீரென நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, உக்ரைன் அதிபருடன் போனில் பேசியிருக்கிறார் ட்ரம்ப். இந்த உரையாடல்தான் தற்போது வெளியே கசிந்துள்ளது. ‘ஹன்டர்மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படி நெருக்கடி கொடுத்திருக்கிறார். அப்போது ராணுவ நிதியுதவி தொடர்பாக சில பேரங்களையும் பேசியிருக்கிறார்’ என்பதுதான் ட்ரம்ப் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு.

விளாடிமிர் செலென்ஸ்கி,  ட்ரம்ப்
விளாடிமிர் செலென்ஸ்கி, ட்ரம்ப்

‘தனிப்பட்ட அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாக, அண்டை நாட்டுடன் ரகசிய பேரத்தில் ஈடுபட்டு தேசத்தின் பாதுகாப்புக்கே ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ட்ரம்ப்’ எனக் குற்றம்சாட்டியுள்ளார் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்ஸி பெலோசி. மேலும், அவர் ட்ரம்ப் மீது பதவி நீக்க விசாரணையையும் முடுக்கிவிட்டுள்ளார். ஆனால், ட்ரம்ப், ‘பதவி நீக்க விசாரணை ஒரு குப்பை, நகைப்புக்குரியது’ என்று விமர்சித்தார். தொலைபேசி உரையாடலை விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பின் இடைக்கால இயக்குநர் ஜோசப் மக்வைர், ‘உரையாடல் நம்பகமானது’ என்று பிரதிநிதிகள் சபையில் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாக, அண்டை நாட்டுடன் ரகசிய பேரத்தில் ஈடுபட்டு தேசத்தின் பாதுகாப்புக்கே ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறார் ட்ரம்ப்!

தொடர்ந்து, `தொலைபேசி உரையாடல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று அமெரிக்காவின் வெளியுறவுப் பிரிவு, உளவுத்துறை மற்றும் மேற்பார்வைக் குழு மூன்றும் இணைந்து உத்தரவிட்டுள்ளன. இந்தச் சூழலில் உக்ரைன் நாட்டுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதர் கர்ட் வோல்கர் தன் பதவியை ராஜினாமா செய்தது, அரசியல் சூட்டை மேலும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க அதிபராக இருப்பவர் லஞ்சம், ஊழல், தேசத்துரோகம் போன்ற பெரிய குற்றங்களில் ஈடுபட்டதாக உறுதிசெய்யப்பட்டால் மட்டுமே அவர்மீது பதவி நீக்க விசாரணையைக் கொண்டுவர முடியும். முதலில் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபை, விசாரணை செய்யும். பிறகு, செனட் விசாரிக்கும். இறுதியில் இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடைபெறும். மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால் மட்டுமே அதிபரை பதவியிலி ருந்து நீக்க முடியும். அமெரிக்க அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சிகள் இதற்கு முன்பு அரிதாகவே பதவி நீக்க அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கின்றன. ஆன்ட்ரூ ஜான்சன், நிக்சன் மற்றும் பில் கிளின்டன் ஆகியோர் இத்தகைய விசாரணையை எதிர்கொண்டிருக் கிறார்கள். ஆனால், பதவி நீக்கத்துக்கு இரு அவைகளில் தேவையான ஆதரவு கிடைக் காததால், அவர்களின் பதவி தப்பியது.

“பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி பலமாக இருப்பதால் அங்கு ட்ரம்ப்புக்கு எதிரான விசாரணைக்கு ஆதரவு கிடைக்கலாம். ஆனால், குடியரசுக் கட்சி கோலோச்சும் செனட்டில் இது எடுபடாது. அதனால் அதிபர் பதவிக்கு ஆபத்தில்லை” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் ட்ரம்பின் ஆதரவாளர்கள். தற்போது 300-க்கும் மேற்பட்ட முன்னாள் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணைக்கு ஆதரவு அளித்துள்ளனர். இது

தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு களில் 55 சதவிகித அமெரிக்கர்கள் விசாரணையை ஆதரிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பிரதி

நிதிகள் சபை தனது விசாரணை அறிக்கையை அக்டோபர் இறுதிக்குள் வெளியிடும் எனத் தெரிகிறது. அதன் பிறகே என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியும்.

ஒருவேளை, அதிபர் ட்ரம்ப் இந்த விவகாரத் திலிருந்து சட்டரீதியாகத் தப்பிக்கலாம். ஆனால், 2020 நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் இந்த விவகாரம் நிச்சயம் ட்ரம்புக்கு உகந்ததாக இருக்காது என்றே தோன்றுகிறது!