Published:Updated:

களத்தில் டொனால்ட் ட்ரம்ப்... `2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார்’ என அறிவிப்பு!

டொனால்ட் ட்ரம்ப்

3-வது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக டொனால்ட் ட்ரம்ப் விண்ணப்பித்திருக்கிறார்.

களத்தில் டொனால்ட் ட்ரம்ப்... `2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார்’ என அறிவிப்பு!

3-வது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக டொனால்ட் ட்ரம்ப் விண்ணப்பித்திருக்கிறார்.

Published:Updated:
டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு, நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றிபெற்றார். அதன் பிறகு ட்ரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் பல மாகாணங்களில் வழக்கும் தொடர்ந்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையில் அமெரிக்காவின் பல பகுதிகளில் அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாக வெடித்தது. இது அமெரிக்க வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாகக் கருதப்படுகிறது.

ட்ரம்ப் - பைடன்
ட்ரம்ப் - பைடன்

இந்த நிலையில், 2024-ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் ட்ரம்ப் இந்தத் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பட்டன. ஆனால், ட்ரம்ப் இதற்கான பதிலை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தார். அவ்வப்போது தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடுவேன் என்பதைச் சூசகமாகத் தெரிவித்துவந்தார்.

இதைத் தொடர்ந்து, கடந்த 8-ம் தேதி ட்ரம்ப் பொதுமக்களிடம், "இந்தத் தேர்தல் பரபரப்பிலிருந்து நான் திசை திரும்புவதாக இல்லை. நவம்பர் 15-ம் தேதி நான் ஃப்ளோரிடாவின் பால்ம் பீச்சில் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிடவிருக்கிறேன்" என அறிவித்திருந்தார். இது மக்களிடம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்
Manuel Balce Ceneta

இந்த நிலையில், நேற்று, ``அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாகவும், புகழ்பெற்றதாகவும் மாற்றுவதற்கு அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கிறேன். வரும் 2024-ம் ஆண்டு மீண்டும் அதிபர் தேர்தலில் நான் போட்டியிடத் தயாராக இருக்கிறேன்" என அறிவித்திருக்கிறார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களையும் ட்ரம்ப் வழங்கியிருக்கிறார். ட்ரம்ப் அதிபராக 3-வது முறை போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது!