Published:Updated:

zebra crossing-ல் தலையணை போட்டுப் படுத்தபடி வீடியோ... இளைஞரைக் கைதுசெய்த துபாய் போலீஸ்

துபாய்

துபாயில் நடுரோட்டில் படுத்துக்கொண்டு வீடியோ எடுத்த நபர் போலீஸிடம் வசமாக மாட்டிக்கொண்டார்.

zebra crossing-ல் தலையணை போட்டுப் படுத்தபடி வீடியோ... இளைஞரைக் கைதுசெய்த துபாய் போலீஸ்

துபாயில் நடுரோட்டில் படுத்துக்கொண்டு வீடியோ எடுத்த நபர் போலீஸிடம் வசமாக மாட்டிக்கொண்டார்.

Published:Updated:
துபாய்

இன்றைய இணையதள உலகில் கிட்டத்தட்டப் பெரும்பாலோனோர் ஸ்மார்ட்போன் பயனர்களாக இருக்கின்றனர். இதன்மூலம், தங்களுக்குப் பிடித்தவற்றைச் செய்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் படங்களாக, வீடியோக்களாகப் பதிவிட்டு லைக்ஸ் வாங்குவதையும், பிரபலமாவதையும் பலர் குறிக்கோளோடு செய்துவருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் சிலர், வேண்டுமென்றே சமூக வலைதளங்களில் கவனம் ஈர்க்கவேண்டுமென்று, பொதுவெளிகளில் மக்களுக்கு இடையூறு ஏற்படும் சில செயல்களைச் செய்வதுண்டு.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

அத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை, பல சமயங்களில் போலீஸ் முதலில் எச்சரித்து அனுப்பிவிட்டு, பின்னர் மீண்டும் இதுபோல் நடக்கும்போது அபராதத்துடன் கைதுசெய்கிறது. இந்த நிலையில், இதுபோன்ற ஒரு சம்பவமாகத்தான், துபாயில் நடுரோட்டில் படுத்துக்கொண்டு வீடியோ எடுத்த நபர் போலீஸிடம் வசமாக மாட்டிக்கொண்டார். இது தொடர்பாக வெளியான வீடியோவில், சம்பந்தப்பட்ட நபர் தலையணையோடு நடுரோட்டில் படுத்துகொண்ருக்கிறார். இதனால் சாலையில் கார்கள் அப்படியே நின்றுகொண்டிருந்தன.

துபாய்
துபாய்

பின்னர் இது குறித்து நடவடிக்கை எடுத்த  துபாய் போலீஸ், அல் முராகபத்(Al Muraqabbat) மாவட்டத்தில் கடந்த 4-ம் தேதி அவரைக் கைதுசெய்தது. அதைத் தொடர்ந்து, நடுரோட்டில் படுத்திருக்கும் அந்த நபரின் படத்தை ட்விட்டரில் பதிவிட்ட துபாய் போலீஸ், ``தன்னுடைய உயிருக்கும், மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்திய ஒரு ஆசிய மனிதரை கைதுசெய்திருக்கிறோம்" என சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தது. மேலும், இந்த நடவடிக்கையால் சமூக வலைதள பயனர்கள் பலரும் துபாய் போலீஸை பாராட்டிவருகின்றனர்.