Published:Updated:

`சவுதி இளவரசருக்கு 11 வயது மகளைத் திருமணம் செய்யத் திட்டம்!’ - மனைவியால் சிக்கிய துபாய் மன்னர்

துபாய் மன்னர்
துபாய் மன்னர்

துபாய் மன்னர் ஷேக் முகமது மீது அவரின் மனைவி கூறியிருந்த குற்றச்சாட்டு அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ராஷித் அல் - மகோடமுக்கும் அவரின் ஆறாவது மனைவியான இளவரசி ஹாயா பின்ட் அல் ஹுசைனுக்கும் இடையே சமீபகாலமாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன்னரிடமிருந்து விவாகரத்து கோரியிருந்தார் ஹயா. இதற்கிடையில் கடந்த வருடம் மே மாதம் தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் ஹயா திடீரென தலைமறைவானார். முதலில் அவர், ஜெர்மனிக்குச் சென்றதாகவும் அங்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மனைவி ஹாயாவுடன் மன்னர்
மனைவி ஹாயாவுடன் மன்னர்

பிறகு அங்கிருந்து லண்டன் சென்று தற்போது அங்கேயே தன் குழந்தைகளுடன் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹாயா தன் கணவரும் துபாய் மன்னருமான ஷேக் முகமதுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணையின்போது கணவரால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தன் 11 வயது நிரம்பிய மகளை சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு திருமணம் செய்து வைக்கப் பார்ப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த வழக்கு கடந்த எட்டு மாதங்களாக லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தற்போது இளவரசிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இளவரசி ஹாயாவுக்கும் அவரின் குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கடத்தல், கட்டாயப்படுத்துதல், சித்ரவதை, அச்சுறுத்தல் விளைவித்தல் போன்ற மன்னர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதனால் மன்னருக்கு எதிராகவும் லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

துபாய் மன்னர்
துபாய் மன்னர்

இது மன்னர் சார்ந்த விஷயம் என்பதால் இந்த வழக்கை துபாய் அரசு தனிப்பட்ட வழக்காகவே பார்த்து வந்தது. தற்போது மன்னருக்கு எதிராகத் தீர்ப்பு வந்துள்ளதால் இதனால் மொத்த துபாயின் வியாபாரத்துக்குப் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. சவுதி இளவரசர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து இதுவரை அந்நாட்டு அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

அடுத்த கட்டுரைக்கு