Published:Updated:

பிரான்ஸ்: 30 ஆண்டுகளுக்கு பிறகு பெண் பிரதமர்... எலிசபெத் போர்னை நியமித்த அதிபர் இமானுவேல் மேக்ரான்

எலிசபெத் போர்ன் ( ட்விட்டர் )

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக எலிசபெத் போர்ன்-ஐ நியமித்திருக்கிறார் அதிபர் இமானுவேல் மேக்ரான்.

பிரான்ஸ்: 30 ஆண்டுகளுக்கு பிறகு பெண் பிரதமர்... எலிசபெத் போர்னை நியமித்த அதிபர் இமானுவேல் மேக்ரான்

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக எலிசபெத் போர்ன்-ஐ நியமித்திருக்கிறார் அதிபர் இமானுவேல் மேக்ரான்.

Published:Updated:
எலிசபெத் போர்ன் ( ட்விட்டர் )

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இமானுவேல் மேக்ரான் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் அதிபராக இருக்கும் ஒருவரே மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதன்முறை. அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது இமானுவேல் மேக்ரானின் தேர்தல் வாக்குறுதிகள் எனக் கருதப்படுகிறது.

இமானுவேல் மேக்ரான்
இமானுவேல் மேக்ரான்

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, இமானுவேல் மேக்ரான் அமைச்சரவையில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன் தொடர்ச்சியாக எலிசபெத் போர்ன் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக எலிசபெத் போர்ன் 2020 முதல் 2022 வரை பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸின் அரசாங்கத்தில் தொழிலாளர்துறை அமைச்சராகப் பணியாற்றினார். அப்போது அவரின் கண்காணிப்பின் கீழ், பிரான்ஸில் வேலையின்மை 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 61 வயதான எலிசபெத் போர்ன் ஒரு திறமையான தொழில்நுட்ப வல்லுநராகக் கருதப்படுகிறார்.

பிரான்ஸ் நாட்டின் வரலாற்றில் பெண் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவது இது இரண்டாவது முறை. 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டில் ஒரு பெண் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism