Published:Updated:

எலான் மஸ்க்குக்கு கூகுள் இணை நிறுவனர் மனைவியுடன் தொடர்பா?! - விளக்கமளித்த மஸ்க்

எலான் மஸ்க்

கூகுளின் இணை நிறுவனரும், கோடீஸ்வரருமான செர்ஜி பிரின் மனைவியுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலையடுத்து, எலான் மஸ்க் அது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார்.

எலான் மஸ்க்குக்கு கூகுள் இணை நிறுவனர் மனைவியுடன் தொடர்பா?! - விளக்கமளித்த மஸ்க்

கூகுளின் இணை நிறுவனரும், கோடீஸ்வரருமான செர்ஜி பிரின் மனைவியுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலையடுத்து, எலான் மஸ்க் அது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார்.

Published:Updated:
எலான் மஸ்க்

கூகுள் இணை நிறுவனரும், உலகின் 6-வது பெரிய பணக்காரருமானவர் செர்ஜி பிரின். இவர் தன் மனைவி நிக்கோல் ஷனாஹனிடமிருந்து விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த நிலையில், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவியுடன் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்குக்குத் திருமணம் தாண்டிய தொடர்பு இருப்பதாகச் செய்தி வெளியிட்டது.

தி வால் ஸ்டீர்ட் ஜர்னல் வெளியிட்ட செய்தியில், `` 2021, டிசம்பர் மாதத்தில் எலான் மஸ்குக்கும், நிகோலுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. மியாமி நகரில் ஆர்ட் பேஸல் என்ற நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலிமிருந்தும் கோடீஸ்வரர்கள் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் நிகோலிடம் மஸ்க் எல்லை மீறி நடந்துகொண்டார். இது செர்ஜி பிரினுக்குத் தெரியவந்த நிலையில், பிரினிடம் மஸ்க் முழங்காலிட்டு மன்னிப்புக் கேட்டு தப்பித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன'' என தெரிவித்திருக்கிறது. இந்தச் செய்தி சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில், எலான் மஸ்க் இது தொடர்பாக பதிவிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், ``இது ஓர் ஆதாரமற்ற செய்தி. செர்ஜியும் நானும் நண்பர்கள். கடந்த இரவில்கூட இருவரும் பார்ட்டியில் ஒன்றாக இருந்தோம். செர்ஜி மனைவி நிகோலை கடந்த மூன்று ஆண்டுகளில் இரு முறை மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அந்த இரு முறையிலும்கூட நாங்கள் அனைவரும் இருக்கும்போதுதான் சந்தித்தோம். எங்களுக்குள் எந்தவிதமான தொடர்பும் இல்லை” எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!