Published:Updated:

தீவிரமடையும் உக்ரைன் போர்; தலைநகர் கீவில் இந்தியத் தூதரகம் மூடப்பட்டதாக தகவல்!

உக்ரைன் -ரஷ்யா போர் ( ட்விட்டர் )

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்தியத் தூதரகம் மூடப்பட்டு, லிவிவ் நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது

தீவிரமடையும் உக்ரைன் போர்; தலைநகர் கீவில் இந்தியத் தூதரகம் மூடப்பட்டதாக தகவல்!

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்தியத் தூதரகம் மூடப்பட்டு, லிவிவ் நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது

Published:Updated:
உக்ரைன் -ரஷ்யா போர் ( ட்விட்டர் )

ரஷ்யா-உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதனால், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. ரஷ்யா பெரும் படையுடன் கீவ் நகரை நோக்கி முன்னேறி கொண்டிருப்பதால், `இந்தியர்கள் அனைவரும் உடனடியாக தலைநகர் கீவிலிருந்து வெளியேறுங்கள். கிடைக்கூடிய ரயில் அல்லது இதர வாகனங்கள் மூலம் அவரசரமாக வெளியேறுங்கள்' என இந்தியத் தூதரகம் இந்தியர்களை வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில், உக்ரைன் போரில் நேற்று கர்நாடக மாநிலம், ஹாவேரி பகுதியைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்தார்.

உக்ரைன் -ரஷ்யா போர்
உக்ரைன் -ரஷ்யா போர்
ட்விட்டர்

உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து அங்கிருந்து சுமார் 12 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இது அங்கு வசிக்கும் மொத்த மக்களின் எண்ணிக்கையில் 60 சதவிகிதம் என்றும் கூறப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் ஏழாவது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், இந்தியர்கள் அனைவரும் கிட்டதட்ட கீவிலிருந்து வெளியேறி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்தியத் தூதரகம் மூடப்பட்டு, அங்கிருந்த தூதரக அதிகாரிகள் அனைவரும் நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள லிவிவ் நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism