Published:Updated:

இங்கிலாந்து எம்.பி. கத்தியால் குத்தி கொடூரக் கொலை! - பட்டப்பகலில், சர்ச் வளாகத்தில் அதிர்ச்சி

இங்கிலாந்து எம்.பி. டேவிட் அமெஸ்
News
இங்கிலாந்து எம்.பி. டேவிட் அமெஸ்

பட்டப்பகலில், சர்ச் வளாகத்தில் ஆளுங்கட்சியின் எம்.பி. ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இங்கிலாந்து நாட்டின் எம்.பி. ஒருவர் மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டுகொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்த மர்ம வாலிபர் ஒருவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இங்கிலந்து நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலைசெய்யப்பட்ட எம்.பி. சர் டேவிட் அமெஸ்
கொலைசெய்யப்பட்ட எம்.பி. சர் டேவிட் அமெஸ்
Richard Townshend

இங்கிலாந்தில் தற்போது போரிஸ் ஜான்சன் பிரதமராக இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இந்த கட்சியில் சுமார் 38 ஆண்டுகளாக எம்.பி.யாக இருப்பவர் சர் டேவிட் அமெஸ். நேற்று வெள்ளிக்கிழமை, இவர் தனது சொந்தத் தொகுதியான எசக்ஸ் நகரில் உள்ள சர்ச் ஒன்றில் மக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராதபடி, கூட்டத்திலிருந்த ஒரு இளைஞர் திடீரென தன் கையில் வைத்திருந்த கத்தியால், டேவிட் அமெஸை சரமாரியாகக் குத்தியிருக்கிறார். இதில் நிலைகுலைந்த போன அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த இளைஞரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பட்டப்பகலில், சர்ச் வளாகத்தில் ஆளுங்கட்சியின் எம்.பி. ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கோர சம்வத்திற்கு அந்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.