Published:Updated:

இலங்கை: தீவிரமடைந்த எதிர்க்கட்சிகள், மக்கள் போராட்டம் - அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா!

மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே

நேற்று நள்ளிரவு நடந்த இலங்கையின் அமைச்சரவை அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய முடிவு.

இலங்கை: தீவிரமடைந்த எதிர்க்கட்சிகள், மக்கள் போராட்டம் - அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா!

நேற்று நள்ளிரவு நடந்த இலங்கையின் அமைச்சரவை அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய முடிவு.

Published:Updated:
மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் கடந்த சில வாரங்களாகக் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவருகிறது. அதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர், மக்கள் தெருவில் இறங்கிப் போராடிவருகிறார்கள்.

மக்களின் கடும் கொந்தளிப்பால் ஊரடங்கும் போடப்பட்டு, ராணுவம் தீவிர ரோந்துப் பணியில் உள்ளது. இந்த நிலையில், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக வந்த தகவல் வதந்தி எனவும், தற்போது அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை
இலங்கை
Eranga Jayawardena

இதைத் தொடந்து நேற்று நள்ளிரவு நடந்த இலங்கையின் அமைச்சரவை அவசர ஆலோசனைக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, ``இலங்கைப் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதித்த பின்னர், அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரின் சகோதரரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்சேவைத் தவிர ஒட்டுமொத்தமாக 26 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்யவிருக்கிறோம். எங்கள் ராஜினாமா கடிதங்களைச் சமர்ப்பித்தால்தான் அதிபர் புதிய அமைச்சரவையை அமைக்க முடியும் ” எனத் தெரிவித்தார்.

பதவி விலகியுள்ள அமைச்சர்களில் ராஜபக்சேவின் சகோதரர்களும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism