Published:Updated:

``உக்ரைன் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது; அதனால்தான் அமைதியை ஆதரிக்கிறோம்!” - பிரதமர் மோடி

ஜெர்மனியில் பிரதமர் மோடி

ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மோடி, ``உக்ரைன் போரில் யாரும் வெற்றி பெற மாட்டார்கள், அனைவருமே தோற்றுப்போவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" எனப் பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசினார்.

``உக்ரைன் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது; அதனால்தான் அமைதியை ஆதரிக்கிறோம்!” - பிரதமர் மோடி

ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மோடி, ``உக்ரைன் போரில் யாரும் வெற்றி பெற மாட்டார்கள், அனைவருமே தோற்றுப்போவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" எனப் பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசினார்.

Published:Updated:
ஜெர்மனியில் பிரதமர் மோடி

2021, டிசம்பரில் ஜெர்மனியின் பிரதமராக ஓலஃப் ஷோல்ஸ் பதவியேற்றிருந்தார். இந்த நிலையில், அவர் பதவியேற்ற பிறகு முதன்முறையாகப் பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஷோல்ஸுடன் பெர்லின் நகரில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மோடி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய மோடி, ``உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்தே நாங்கள் போர்நிறுத்தத்தைத்தான் வலியுறுத்தியுள்ளோம். இந்தப் போரில் யாரும் வெற்றிபெற மாட்டார்கள், அனைவருமே தோற்றுப்போவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், அதனால்தான் நாங்கள் அமைதியை ஆதரிக்கிறோம்.

மோடி - ஷோல்ஸ்
மோடி - ஷோல்ஸ்

உக்ரைன் மக்கள் மீதான இந்த மனிதாபிமான தாக்கத்தைத் தாண்டி, எண்ணெய் விலை, உலகளாவிய உணவு விநியோகங்கள் மீதான அழுத்தமானது, உலகில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ஒரு சுமையை உண்டாக்குகிறது. உக்ரைன் மீதான இந்தத் தாக்குதலின் மூலம், சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை ரஷ்யா கவலையில் ஆழ்த்தியுள்ளது" எனக் கூறினார்.

மேலும், ``ஒருவருக்கொருவர் எதிரெதிராகப் போர் செய்வதன் மூலம் அல்லாமல், பொருளாதார வளர்ச்சியை ஒன்றாகச் சாத்தியமாக்குவதன் மூலம், நாங்கள் ஒரு சிறந்த எதிர்காலத்தை அடைய விரும்புகிறோம்" என மோடியுடனான பேச்சுவார்த்தையில் விவாதித்ததாக ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸ் கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism