Published:Updated:

`அழுத்தம் கொடுத்தால் ஏற்க வேண்டிய சூழலில் இலங்கை அரசு'- முன்னாள் எம்.பி ஆறுமுக தொண்டைமான்!

மணிமாறன்.இரா
Vengadesh R

`இலங்கைத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து இந்திய அரசு அழுத்தம் கொடுத்தால், அதை ஏற்கவேண்டிய நிலையில் தான் இலங்கை அரசு உள்ளது' என அந்நாட்டின் முன்னாள் எம்.பி ஆறுமுக தொண்டைமான் கூறினார்.

Arumugam Thondaman
Arumugam Thondaman

புதுக்கோட்டை அருகே பூவரசக்குடியில் உள்ள தங்களது குல தெய்வக் கோயிலான அய்யனார் கோயிலில், இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான், இலங்கை முன்னாள் எம்.பி ஆறுமுக தொண்டைமான் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர், ஆறுமுக தொண்டைமான் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இலங்கையில் ஜனாதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும், பிரதமர் மற்றொரு கட்சியைச் சேர்ந்தவராகவும் இருப்பதால், தொடர்ந்து நிலையற்ற தன்மையே நிலவிவருகிறது. இலங்கையில் நடைபெறும் அடுத்த தேர்தல் முடிவு, மாற்றத்தை ஏற்படுத்தும்.

Arumugam Thondaman
Arumugam Thondaman

இவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதால், இலங்கைத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை தீர்க்க முடியாத நிலையில் உள்ளது. இந்திய அரசு தொடர்ந்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில், நிச்சயம் இவ்விரு பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும். தற்போது, இந்திய அரசு அழுத்தம் கொடுத்தால், அதை ஏற்கவேண்டிய நிலையில்தான் இலங்கை அரசு உள்ளது. இலங்கையில் சீன ராணுவத் தடவாளங்கள் அமைக்க முடியாமல் இருப்பதற்கு இந்தியா, இலங்கை உறவும் தமிழகத்தின் அழுத்தமும்தான் காரணம். இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொடுத்த அழுத்தத்தால், இலங்கைத் தமிழர்கள் தற்போது நிம்மதியாக உள்ளனர்" என்றார்.