Published:Updated:

போதைப்பொருள் குற்றங்கள்: 10 நாள்களில் 12 பேர் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரசு!

சவுதி அரசு ( RUNGROJ YONGRIT / POOL )

சவுதியில் 10 நாள்களில் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் சிலருக்கு வாளால் தலைத் துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

சவுதி அரேபியாவில் போதைப்பொருள்கள் தொடர்பான குற்றங்களுக்காக சமீபத்தில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டது. அங்கு 10 நாள்களில் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் சிலருக்கு வாளால் தலைத் துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் பலர் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 12 பேரில் 3 பேர் பாகிஸ்தான், 4 பேர் சிரியாவைச் சேர்ந்தவர்கள்... 2 பேர் ஜோர்தானியர்கள் மற்ற மூவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள்.

போதைப்பொருள் குற்றங்கள்: 10 நாள்களில் 12 பேர் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரசு!

முன்னதாக இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் சவுதி அரேபியாவில் கிரிமினல் குற்றங்கள், கொலைகள் மற்றும் போராட்ட குழுக்களைச் சார்ந்த 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தற்போதைய வரலாற்றில் இதுதான் சவுதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்ட வெகுஜென மரண தண்டனை என்கிறார்கள்.

கடந்த 2018-ம் ஆண்டு சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவின் பேரில் கொலைக் குழுக்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கியில் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மரண தண்டனைகள் வழங்குவதை குறைக்க முயற்சிப்பதாக சவுதி அரேபியா கூறியிருந்தது.

போதைப்பொருள் குற்றங்கள்: 10 நாள்களில் 12 பேர் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரசு!
ATHIT PERAWONGMETHA

அதோடு கொலை மற்றும் ஆணவக் கொலை தொடர்பான குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில், இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும், பத்து நாள்களில் 12 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது சவுதி அரேபியா. சவுதி அரேபியாவின் இத்தகைய நடவடிக்கையை ஐ.நா, `மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு' எனக் குறிப்பிட்டிருக்கிறது.