Published:Updated:

ஆப்கன்: `100 தினாருக்குப் பெண்களை விற்றார்களா தாலிபன்கள்?' வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தாலிபன்கள் பெண்களை விற்றார்களா?
தாலிபன்கள் பெண்களை விற்றார்களா?

தாலிபன்கள் பெண்களை விற்பதாகவும், நடுரோட்டில்வைத்து பெண் ஒருவரை சுட்டுக் கொன்றதாகவும் சில வீடியோக்கள் பரவிவருகின்றன. உண்மை என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள் தாலிபன்கள். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று, ஆப்கன் தலைநகர் காபூலுக்குள் தாலிபன்கள் நுழைந்ததிலிருந்தே பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. காபூல் விமான நிலைய வீடியோக்களும், தாலிபன்கள் தீம் பார்க் ஒன்றில் குழந்தைகளைப்போல விளையாடும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றன. இந்தநிலையில், கடந்த சில தினங்களாக, புர்கா அணிந்த பெண்கள் சிலரை ஏலம்விட்டு, 100 தினார் பாகிஸ்தான் பணத்துக்கு விற்பனை செய்வது போன்ற வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. `ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் பெண்களை விற்பனை செய்யும் காட்சி இது' என்று பதிவிட்டு, பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிபிசி செய்தி
பிபிசி செய்தி
Screen Shot
`முல்லா பராதர் டு சிராஜுதீன் ஹக்கானி வரை' - ஆப்கனை ஆளப்போகும் தாலிபன் தலைவர்களின் பின்னணி?!

உண்மை என்ன?

இந்த வீடியோ பற்றித் தேடுகையில், இது ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டதல்ல; லண்டனில் எடுக்கப்பட்டது என்கிற உண்மை நமக்குத் தெரியவந்தது. லண்டனில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட வீதி நாடகத்தின்போது எடுக்கப்பட்டதுதான் இந்த வீடியோ.

பிபிசி செய்தித் தளத்தில் இது குறித்த செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அந்தச் செய்தியில், ``பெண்களை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் பாலியல் அடிமைகளாக நடத்துவதை எடுத்துரைக்கும் வகையில் மாதிரி நாடகம் ஒன்று லண்டனில் நடத்தப்பட்டது'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் செய்தியின் மூலம் இது பழைய வீடியோ என்பதும், `தாலிபன்கள்தான் பெண்களை விற்கிறார்கள்' என்கிற தவறான தகவலும் பரவிவருவது நமக்குப் புலப்படுகிறது.

மற்றொரு வீடியோ!

இதேபோல மற்றொரு வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. பெண் ஒருவரை நடுரோட்டில் வைத்து சிலர் சுட்டு வீழ்த்தும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த சிலர், ``புர்காவைச் சரியாக அணியாததால், தாலிபன்களால் நடுரோட்டில்வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்'' என்று பதிவிட்டுவருகின்றனர்.

அல்-கொய்தா
அல்-கொய்தா
Screen Shot
தாலிபன்கள் வசமான ஆப்கன்; தப்பியோடும் மக்கள்! கதறி அழும் பெண்கள்! - ஆப்கன் மக்களின் மனநிலை என்ன?!

உண்மை என்ன?

இது குறித்து பல்வேறு சர்வதேச ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்படிருந்தது. அந்தச் செய்திகளில், ``பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட பெண் ஒருவரை சிரியா நாட்டிலுள்ள அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பினர் நடு ரோட்டில்வைத்துச் சுட்டுக் கொன்றனர்'' என்று சொல்லப்பட்டிருந்தது. இதன் மூலம், சிரியா நாட்டில் அல்-கொய்தா அமைப்பினர் செய்த சம்பவத்தை, ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் செய்ததாகத் தவறான செய்தி பரவிவருவது நமக்குத் தெரியவந்தது. ஆப்கனிலிருந்து மனதைப் பதறவைக்கும் பல்வேறு வீடியோ காட்சிகள் வந்துகொண்டிருக்கின்றன. அதேநேரத்தில் இது போன்ற போலியான செய்திகளோடும் சில வீடியோக்கள் பரவிவருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு