Published:Updated:

ஆப்கன்: உரிமைகளுக்காகப் போராடிய பெண்கள்... தாக்கி அப்புறப்படுத்திய தாலிபன்கள்!

உரிமைகளுக்காகப் போராடிய பெண்கள் ( ட்விட்டர் )

ஆப்கானிஸ்தான், தலைநகர் காபூலில் தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும் என போராட்டம் நடத்திய பெண்கள்மீது தாலிபன்கள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆப்கன்: உரிமைகளுக்காகப் போராடிய பெண்கள்... தாக்கி அப்புறப்படுத்திய தாலிபன்கள்!

ஆப்கானிஸ்தான், தலைநகர் காபூலில் தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும் என போராட்டம் நடத்திய பெண்கள்மீது தாலிபன்கள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
உரிமைகளுக்காகப் போராடிய பெண்கள் ( ட்விட்டர் )

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்தபிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு எதிராக அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். பெண்கள் டி.வி விளம்பர நிகழ்ச்சிகளில் நடிக்கக்கூடாது, ஆண் துணையில்லாமல் வாகனத்தில் செல்லக்கூடாது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை அவர்கள் விதித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்ததிலிருந்து இதுவரை நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனக்கூறப்படுகிறது. தாலிபன்கள்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் வறுமை, பொருளாதார நெருக்கடி என மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் பெண்கள்
ஆப்கானிஸ்தான் பெண்கள்
ட்விட்டர்

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான், தலைநகர் காபூலில் தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும் என போராட்டம் நடத்திய பெண்கள்மீது தாலிபன்கள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சக கட்டடம் முன் ஏராளமான பெண்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு திரண்டிருந்த பெண்கள், வேலை மற்றும் சுதந்திர உரிமைக்கோரி கோஷம் எழுப்பினர். மேலும் ஆகஸ்ட் 15-ம் தேதி கருப்பு தினம் என்ற பேனர்களையும் கையில் ஏந்தியிருந்தனர்.

அப்போது தாலிபன்கள் அங்கு கூடியிருந்த பெண்கள், பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதையடுத்து, அங்கிருந்தவர்கள் களைந்து சென்றனர். இருப்பினும், சிலர் தொடர்ந்து தாலிபன் அரசின் கட்டுப்பாடுகளை எதிர்த்து கோஷமிட்டபடியே நின்றனர். அவர்களை தாலிபன்கள் தாக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.