Published:Updated:

எகிப்து: தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து... 15 குழந்தைகள் உட்பட 41 பேர் பலியான சோகம்!

கெய்ரோவில் தேவாலயத்தில் தீ விபத்து ( ட்விட்டர் )

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருக்கும் தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பலியாகியிருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள காப்டிக் கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக தேவாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையில் ஈடுபட்டபோது தீ விபத்து நிகழ்ந்திருக்கிறது. தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 15 குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கெய்ரோவில் தேவாலயத்தில் தீ விபத்து
கெய்ரோவில் தேவாலயத்தில் தீ விபத்து
ட்விட்டர்

தேவாலயத்தில் நிகழ்ந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை சரியான தகவல் வெளியாகவில்லை. தேவாலயத்தில் ஏற்பட்ட மின்கசிவால்ல் தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என காவல்துறை தரப்பில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எகிப்து அதிபர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.