Published:Updated:

`அனைவரையும் சமமாக நடத்துங்கள்!' - இந்தியாவுக்கு கோரிக்கை வைக்கும் ஆப்கான் முன்னாள் அதிபர்

ஹமித் கர்சாய்
ஹமித் கர்சாய்

இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் சமீபத்தில் பேசியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மத்திய அரசு நிறைவேற்றியிருந்த குடியுரிமை திருத்தச் சட்டம் சர்வதேச அளவில் பல எதிர்வினைகளைச் சந்தித்தது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குடியுரிமைச் சட்டத்தைக் கட்டாயம் நிறைவேற்றியே தீருவோம் என மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கேரளா, பஞ்சாப் மாநில அரசுகள் சட்டப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. கடந்த ஜனவரி 10-ம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக அரசிதழில் வெளியிடப்பட்டது.

சி.ஏ.ஏ
சி.ஏ.ஏ

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்தச் சட்டம் வழிசெய்கிறது. பாகிஸ்தான் இந்தச் சட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளது. வங்கதேசம் இதை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய், "இந்திய முஸ்லிம் உட்பட அனைத்து சிறுபான்மையினரையும் சமமாக நடத்த வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

`கபடிப் போட்டிக்காக நடந்த கொலை..!’- கோவையில் பழிதீர்க்கும் படலத்தில் சிக்கிய நண்பர்கள்

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர், "ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் என யாருமே இல்லை. ஆப்கானிஸ்தானே நீண்ட காலமாகப் போர் மற்றும் உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் முஸ்லிம்கள், இந்துக்கள், சீக்கியர்கள் என அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியாவில் சொல்லப்படுவதைப் போல அல்ல, ஆப்கானிஸ்தானில் நிலைமை என்பது வேறு.

ஹமித் கர்சாய்
ஹமித் கர்சாய்

தாலிபான் ஆட்சி முடிந்து நான் அதிபரானபோது ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய இந்துக்கள், சீக்கியர்களை மீண்டும் அழைத்து வந்து அவர்களின் சொத்துகளைத் திருப்பி அளிக்க வேண்டும் என்பதே ஆப்கானிஸ்தான் மக்களின் எண்ணமாக இருந்தது. இதே நிலை இந்தியாவிலும் எதிரொலிக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு