Published:Updated:

``இந்தியாவின் பன்முகத்தன்மை கவர்ச்சிகரமானது; இது எங்களுக்கு எளிதானது அல்ல" - பிரெஞ்சு தூதர் புகழாரம்

இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் இம்மானுவேல் லெனைன்

இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் இம்மானுவேல் லெனைன் (Emmanuel Lenain), இந்தியாவின் பன்முகத்தன்மை, கலாசாரத்தைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

போன்ஜர் இந்தியா(Bonjour India) 2022 வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் இம்மானுவேல் லெனைன்(Emmanuel Lenain), இந்தியாவின் பன்முகத்தன்மை, கலாசாரத்தைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், ``இந்தியாவின் பன்முகத்தன்மை கவர்ச்சிகரமானது. மேலும், இந்த பன்முகத்தன்மையைக் கையாளும் திறனையும் இந்தியா கொண்டுள்ளது. இது மிகவும் நவீனமானது என்று நாங்கள் உணர்கிறோம். உலகமயமாக்கப்பட்ட உலகில் கலாசாரம், தகவல் ஆகியவற்றின் தாக்கங்களின் பன்முகத்தன்மையைக் கையாள்வது நம் அனைவருக்கும் ஒரு சவாலாகும்.

போன்ஜர் இந்தியா(Bonjour India) 2022
போன்ஜர் இந்தியா(Bonjour India) 2022

அந்த வகையில், இந்தியா ஒரு சிறந்த முன்மாதிரியை வழங்குகிறது. இது எங்களுக்கு எளிதானது அல்ல. ஒட்டுமொத்தமாக, இந்தியா மிகவும் ஈர்க்கக்கூடியது. கலாசார களத்தில் தொடர்ந்து ஒத்துழைத்ததற்காக இந்திய அரசு, குறிப்பாக, வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சிலுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று கூறினார் லெனைன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism