Published:Updated:

``அமெரிக்கா-ரஷ்யா இடையே அணு ஆயுதப்போர் ஏற்பட்டால்..!" - ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்

ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல் ( ட்விட்டர் )

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது இரு நாடுகளுக்கு இடையே ஒரு சிறிய மோதல் ஏற்பட்டால்கூட, உலகளாவிய பஞ்சத்துக்கு வழிவகுக்கும்.

அமெரிக்கா-ரஷ்யா இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் 500 கோடி மக்கள் உயிரிழக்க நேரிடும் என அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆறு வெவ்வேறு அணுசக்தி யுத்த சூழ்நிலைகளின் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இது தொடர்பாக, நேச்சர் புஃட் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுக் கட்டுரையில், ``அமெரிக்காவுக்கும்-ரஷ்யாவுக்கும் இடையே ஒரு முழு அளவிலான மோதல் நடந்தால், அந்த போர் மனித குலத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்களை அழித்துவிடும்.

அமெரிக்கா - ரஷ்யா இடையே முழு அளவிலான அணு ஆயுதப் போர்
அமெரிக்கா - ரஷ்யா இடையே முழு அளவிலான அணு ஆயுதப் போர்
ட்விட்டர்

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது இரு நாடுகளுக்கு இடையே ஒரு சிறிய மோதல் ஏற்பட்டால்கூட, உலகளாவிய பஞ்சத்துக்கு வழிவகுக்கும். இதன்மூலம் 500 கோடி மக்கள் உயிரிழக்க நேரிடும். அணுசக்தி போர், காலநிலை மாற்றத்தில் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வெப்பத்தால் ஓசோன் படலம் அழிந்துவிடும்'' என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

விளாடிமிர் புதின் உக்ரைன்மீது படையெடுத்ததையடுத்து, அமெரிக்காவுக்கும்-ரஷ்யாவுக்குமிடையே உள்ள மோதல்களின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.