Published:Updated:

`அபராதம்; 28,000 உயிர்காக்கும் கருவிகள்’ - ஜெர்மனியின் சிறந்த கொரோனா எதிர்ப்பைப் பகிரும் மருத்துவர்

ஜெர்மனி
ஜெர்மனி ( AP )

ஜெர்மனி, வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது, அதுவே வைரஸால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகம் முழுவதும் கொரோனா பரவலால் திணறிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,53,320 ஆக உள்ளது அதுவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,408 ஆக உள்ளது. ஆனால், இதை எளிதாகக் கையாண்டு மக்களின் உயிரிழப்பைக் குறைத்து பிறநாட்டு மருத்துவர்களை வியக்க வைத்துள்ளது ஜெர்மனி. அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,181 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆகவும் உள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அந்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்ட மருத்துவத்துறைகள் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டுள்ளார் இலங்கை தமிழராக இருந்து தற்போது ஜெர்மனியில் வசித்து வரும் அந்நாட்டின் சிறந்த நரம்பியல் நிபுணர் Dr.அருணி வேலழகன்,`வளர்ந்துவிட்ட ஜனநாயகம் ஆழமாக வேரூன்றிவிட்ட ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பரவியதும் முதலில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு மூன்று பேருக்கு மேல் இணைந்து சாலையில் நடக்கக் கூடாது என்பதுதான். அதையும் மீறி சென்றால் 25,000 யூரோ வரை அபராதமாக விதிக்கப்படும். அதைக் கட்டத் தவறினால் ஜெயில் தண்டனை உண்டு எனக் கூறப்பட்டது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அதை இன்னும் கடுமையாக்கியுள்ளது ஜெர்மன் அரசு. அதாவது 2 பேருக்கு மேல் சாலையில் இணைந்து செல்லக் கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது மட்டுமில்லாது இங்கு வைரஸ் பரவல் அதிகமானதும் இங்கு உள்ள அனைத்து உணவகங்கள், பார், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், கடைகள் என மனிதர்கள் அதிகம் கூடும் இடங்கள் முற்றிலும் மூடப்பட்டன. உணவகங்களில் பார்சல் செய்யப்பட்ட உணவுகள் மட்டுமே விற்கப்பட்டன. தவிர நலிந்த மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மாதம் 432 யூரோ (இந்திய மதிப்பில் 32,000 ரூபாய்) நேரடியாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், இந்தக் கடுமையான சூழல் முடியும்வரை வாடகை வீடுகளில் வசிப்பவர்களில் வாடகை கட்ட முடியாதவர்கள் கட்ட தேவையில்லை, வீட்டு ஓனர்கள் அவர்களிடம் வாடகை வசூலிக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

மருத்துவர் அருணி
மருத்துவர் அருணி

சுகாதார ரீதியிலான நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, ஏற்கெனவே உள்ள மருத்துவமனைகளைத் தவிரப் பெரிய ஹால், உள்விளையாட்டு அரங்கங்கள், நிகழ்ச்சிகள் நடக்கும் பெரிய கூடங்கள் போன்ற அனைத்து இடங்களும் மிக விரைவாகத் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன. ஜெர்மனியில் மொத்தமாக 1,942 மருத்துவமனைகள் உள்ளன, தற்போது இங்கு உயிர்காக்கும் கருவிகள் கொண்ட 28000 படுக்கைகளை இரட்டிப்பாக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவசியமற்ற அறுவை சிகிச்சைகளைத் தள்ளிவைத்து, அந்தப் படுக்கைகளை கொரொனா நோயாளிகளைப் பராமரிப்பதற்காகவும் சிகிச்சையளிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகள் ஏனைய நோயாளிகளிடமிருந்து விலக்கி வைக்கப்பட்டே பராமரிக்கப் படுகின்றனர்."

கொரோனா பாதிப்பில் 5-வது இடம்; உயிரிழப்பில் 10-வது இடம் - உலக நாடுகளைப் பிரமிப்பில் ஆழ்த்திய ஜெர்மனி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜெர்மனி, வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது, அதுவே வைரஸால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. சுகாதாரத்துறையில் ஜெர்மனி எடுத்த துரித முன்னெச்சரிக்கைகளே இதற்கு முக்கியக் காரணம். தற்போது ஜெர்மனியின் அடுத்தகட்ட முக்கிய நடவடிக்கையாக இருப்பது உயிர்காக்கும் கருவிகளை இன்னும் அதிகரிப்பதுதான். இங்கு 54 வயதுடையவர்தான் குறைந்த வயதில் வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவராக உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

பாலசந்திரன்
பாலசந்திரன்

இவரை அடுத்து நம்மிடம் பேசிய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலசந்திரன், `நம் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை சிலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். ஆனால், ஒரு பெரிய தீங்கினை தவிர்க்க வேண்டும் என்றால் நம் சுதந்திரத்தை ஓரளவு கட்டுப்படுத்துகிற சில கட்டுப்பாடுகளைத் தற்காலிகமாக கொண்டுவரத்தான் வேண்டும். நாம் தற்போது சிக்கலான நேரத்தில் இருக்கிறோம். மிகப் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்துத்தான் ஆக வேண்டும். கொரோனா இரண்டு பயங்கர விளைவுகளை உருவாக்கும் வல்லமை கொண்டுள்ளது. ஒன்று சுகாதாரக் கேடுமூலம் மருத்துவத்துறைக்குப் பெரும் சவாலாக உள்ளது. மற்றொன்று பொருளாதார நசிவு மூலம் ஏழை மக்களுக்குப் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. இந்தியா உட்பட அனைத்து வளர்ந்த நாடுகளும் இதே பிரச்னையில்தான் சிக்கியுள்ளன. எனவே, மக்கள் அனைவரும் பிரதமர் கேட்டுக்கொண்டபடி தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு தன்னையும் பாதுகாத்து பிறரையும் காக்க வேண்டும்.ஜெர்மனி அரசைப் போல நம் நாட்டும் அரசும் ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு