Published:Updated:

கொதிப்பில் இலங்கை மக்கள்; அமெரிக்காவில் குடியேற திட்டம்... கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்த கோத்தபய?

கோத்தபய ராஜபக்‌சே

அமெரிக்காவில் குடியேற கோத்தபய ராஜபக்சே கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கொதிப்பில் இலங்கை மக்கள்; அமெரிக்காவில் குடியேற திட்டம்... கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்த கோத்தபய?

அமெரிக்காவில் குடியேற கோத்தபய ராஜபக்சே கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
கோத்தபய ராஜபக்‌சே

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசுக்கெதிராக பொதுமக்கள் போராட்டத்தில் களமிறங்கியிருக்கின்றனர். பல மாதங்களாக நீடித்துவரும் போராட்டத்துக்கு மத்தியில் தற்போது ரணில் விக்கிரம சிங்க இலங்கை அதிபராக பொறுப்பேற்றிருக்கிறார்.

கோத்தபய ராஜபக்சே ஜூலை 13-ம் தேதி குடும்பத்துடன் மாலத்தீவுக்கு தப்பி ஓடினார். அதன் பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்குச் சென்ற கோத்தபய ராஜபக்சே, தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து அங்கிருந்து தாய்லாந்துக்குச் சென்றார். கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் தாய்லாந்திலிருந்து இலங்கை திரும்பவார் எனக் கூறப்பட்டது.

இலங்கை
இலங்கை

இந்த நிலையில், இலங்கையில் மக்கள் இன்னும் ராஜபக்சேமீது கோபத்தில் இருப்பதால், கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்காக அவருக்கும், அவர் மனைவி லோமாவும் சேர்த்து கிரீன் கார்டு கோரி விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கோத்தபய ராஜபக்சே தனது அமெரிக்க குடியுரிமையை துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.