Published:Updated:

இலங்கை டு மாலத்தீவு டு சிங்கப்பூர்? - `AN32' விமானத்தில் மனைவியுடன் கோத்தபய தப்பியது எப்படி?!

கோத்தபய ராஜபக்‌சே

மாலத்தீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகரும், முன்னாள் அதிபருமான முகமது நசீத்தின் துணையுடன் மாலத்தீவுக்குள் நுழைந்திருக்கிறார் கோத்தபய ராஜபக்சே... அங்கிருந்து அடுத்து சிங்கப்பூருக்கு பறக்கவிருக்கிறாரா?!

இலங்கை டு மாலத்தீவு டு சிங்கப்பூர்? - `AN32' விமானத்தில் மனைவியுடன் கோத்தபய தப்பியது எப்படி?!

மாலத்தீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகரும், முன்னாள் அதிபருமான முகமது நசீத்தின் துணையுடன் மாலத்தீவுக்குள் நுழைந்திருக்கிறார் கோத்தபய ராஜபக்சே... அங்கிருந்து அடுத்து சிங்கப்பூருக்கு பறக்கவிருக்கிறாரா?!

Published:Updated:
கோத்தபய ராஜபக்‌சே

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிவருகின்றனர் இலங்கை மக்கள். மக்கள் போராட்டங்களை சற்றும் கண்டு கொள்ளாத அதிபர் கோத்தபய, தனது பதவியைக் காப்பாற்றும் வேலைகளில் தீவிரமாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், கடந்த ஜூன் 9 அன்று அதிபர் மாளிகையின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். காவல்துறை, ராணுவத் தடுப்புகளை மீறி மக்கள் உள்ளே நுழைந்த செய்தி அறிந்த கோத்தபய ராஜபக்சே, வேறு வழியாகத் தப்பிச் சென்றார். முதலில் அதிபர் மாளிகையிலிருந்து தப்பியவர், தற்போது நாட்டிலிருந்தே தப்பிச் சென்று மாலத்தீவில் தஞ்சமடைந்துவிட்டார். மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் செல்லவும் திட்டமிட்டுவருகிறார். கோத்தபய, இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு எப்படித் தப்பிச் சென்றார்... அடுத்து என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பதை இங்கே பார்ப்போம்!

சுரங்கப் பாதை வழியாகத் தப்பிய கோத்தபய!

ஜூலை 9 அன்று, கோத்தபய அரசுக்கு எதிராகப் போராடிவந்த மக்களில் ஆயிரக்கணக்கானோர், ஆக்ரோஷத்துடன் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். மக்கள் அங்கு வருவதற்கு முன்பாகவே மாளிகையிலிருந்து தப்பிச் சென்றிருந்தார் கோத்தபய. மாளிகைக்குள் நுழைந்த மக்கள், அதிபர் மாளிகையின் ஒவ்வொரு பகுதியாக ஆராயத் தொடங்கினர். அப்போது அங்கு ஒரு பகுதியில் சுரங்க வழி இருப்பதை அவர்கள் கண்டனர். அந்தச் சுரங்கப்பாதை வழியாகத்தான் கோத்தபய ராஜபக்சே தப்பிச் சென்றிருக்க வேண்டும் என்று மக்களில் சிலர் தெரிவித்தனர்.

இலங்கை
இலங்கை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிபர் மாளிகையிலிருந்து தப்பிய கோத்தபய எங்கு பதுங்கியிருக்கிறார் என்ற தகவல்கள் எதுவும், முதலில் வெளியாகாமலேயே இருந்தன. பின்னர் அவர், இலங்கையிலுள்ள ஏதாவது ஒரு ராணுவ முகாமில்தான் இருக்க வேண்டும் என்ற யூகங்கள் கிளம்பின. இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை (ஜூன் 11) மாலை வேளையில் கோத்தபய, இலங்கை விமான நிலையத்துக்கு வந்ததாகவும், துபாய் செல்ல முயன்றதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், விமான நிலைய அதிகாரிகள் அவர் துபாய் செல்ல ஒப்புதல் வழங்கவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

4 முறை தப்ப முயற்சி!

ஜூன் 11-ம் தேதி மாலை முதல் தொடர்ச்சியாக அடுத்தடுத்து புறப்படவிருந்த நான்கு விமானங்களில் துபாய் செல்ல கோத்தபயவும், அவரின் மனைவியும் முயன்றதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், நான்கு முறையும் அவர்கள் பயணிக்க ஒப்புதல் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில்தான், ஜூன் 13 அன்று அதிகாலை 3 மணி அளவில், மாலத்தீவின் தலைநகர் மாலேவுக்குச் சென்று இறங்கியிருக்கிறார் கோத்தபய.

AN32 விமானத்தில் தப்பியோட்டம்!

இது குறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்திகளில், ``அதிபர் மாளிகையிலிருந்து தப்பிய பிறகு விமான நிலையம் அருகிலிருக்கும் ராணுவ முகாமில்தான் இருந்திருக்கிறார் கோத்தபய. அங்கிருந்து நான்கு முறை துபாய் தப்ப முயன்றிருக்கிறார். அதன் பிறகுதான், மாலத்தீவுக்குத் தப்பிச் செல்லும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். முதலில், `இன்னும் கோத்தபய இலங்கை அதிபர் பதவியிலிருந்து விலகவில்லை. எனவே, அவரை நமது நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது' என்று மறுத்திருக்கிறது மாலத்தீவு அரசு. பின்னர், மாலத்தீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகரும், முன்னாள் அதிபருமான முகமது நசீத் (Mohamed Nasheed) நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக கோத்தபய மாலத்தீவுக்குள் வர அனுமதி கிடைத்திருக்கிறது.

மாலத்தீவு
மாலத்தீவு

இதையடுத்து, இலங்கையிலுள்ள விமானப்படைத் தளத்திலிருந்து, இலங்கை விமானப்படையின் AN32 ரக விமானத்தில் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றிருக்கிறார் கோத்தபய. அந்த விமானத்தில் கோத்தபய, அவரின் மனைவி, பாதுகாவலர்கள் உட்பட 13 பேர் மாலத்தீவுக்குச் சென்றிருக்கின்றனர்'' என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கோத்தபய தப்பியோடியது குறித்துப் பேசும் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர், ``ஜூன் 13-ம் தேதி பதவியை ராஜினாமா செய்வதாக இருந்தார் கோத்தபய. எனவே அதற்குள்ளாக நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுவிட வேண்டும் என்பது அவரது திட்டமாக இருந்தது. அதிபர் பதவியிலிருக்கும்போது அவரைக் கைதுசெய்ய முடியாது என்பதால்தான், பதவி விலகும் முன் தப்பியோட நினைத்தார். அதைப்போலவே, பதவி விலகும் முன்னரே மாலத்தீவுக்கு ஓடிவிட்டார்'' என்கின்றனர்.

மாலத்தீவு டு சிங்கப்பூர்!

மாலத்தீவுக்கு கோத்தபய வந்திறங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாலத்தீவு அதிபர் மாளிகைக்கு வெளியே மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கிருக்கும் அரசியல் தலைவர்களும் கோத்தபயவை அனுமதித்தற்காக மாலத்தீவு அதிபருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் தப்பிச் செல்ல கோத்தபய திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது தொடர்பாக சிங்கப்பூரைச் சேர்ந்த அதிகாரிகளுடன் கோத்தபய தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

கோத்தபய ராஜபக்சே மீது மீண்டும் ஊழல் வழக்கு!
கோத்தபய ராஜபக்சே மீது மீண்டும் ஊழல் வழக்கு!

`சிங்களர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் நான்' என்று பெருமிதத்துடன் பேசிய கோத்தபய ராஜபக்சேவின் சாம்ராஜ்ஜியம் தற்போது முற்றிலுமாக சரிந்துவிட்டது. சொந்த மக்களால் துரத்தி அடிக்கப்பட்டு, இன்று நாடு நாடாகத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் கோத்தபய. ``சர்வாதிகார மனநிலையுடனும், சுயநலத்துடனும் செயல்படும் ஆட்சியாளர்களுக்கு கோத்தபயவின் நிலைதான் ஏற்படும்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.