Published:Updated:

வித்தியாச வாக்குப்பதிவு; வாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு!- பரபரப்பில் இலங்கை அதிபர் தேர்தல்

இலங்கை தேர்தல்
News
இலங்கை தேர்தல் ( AP )

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இலங்கையில் இன்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று நாளை முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. பிற நாடுகளைப் போல் இல்லாமல் இலங்கையில் வாக்குப்பதிவு மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெறும்.

இலங்கை தேர்தல்
இலங்கை தேர்தல்
Twitter/@SriLankaTweet

இன்னும் அங்கு வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. முன் எப்போதும் இல்லாமல் இலங்கையில் சுமார் 35 வேட்பாளர்கள் அதிபர் பதவிக்காகப் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் 26 அங்குல நீளத்துக்கு வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் பெயர்கள் தமிழ், சிங்கள, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் அச்சடிக்கப்பட்டுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இலங்கையைப் பொறுத்தவரையில் முதல் விருப்பம், இரண்டாவது விருப்பம், மூன்றாவது விருப்பம் என்ற வரிசையில் வாக்களிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. ஒருவருக்கு மட்டும் வாக்களிக்க விரும்புபவர்கள், வேட்பாளருக்கு அருகில் கொடுக்கப்பட்டிருக்கும் சின்னத்தில் `X’ எனக் குறியிடலாம். அதுவே முதல் விருப்பமாக இருந்தால் முதல் வேட்பாளருக்கு அருகில் 1 என்றும் இரண்டாவது விருப்பமாக இருந்தால் இரண்டாவது வேட்பாளருக்கு அருகில் 2 எனவும் குறிப்பிட வேண்டும்.

இலங்கை தேர்தல்
இலங்கை தேர்தல்
Twitter/@SriLankaTweet

வாக்கு எண்ணிக்கையின்போது, முதல் விருப்பமாக உள்ள வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் எண்ணிக்கை கணக்கிடப்படும். அதில் யார் ஐம்பது சதவிகிதத்துக்கும் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளாரோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். யாரும் 50% பெறவில்லை என்றால் இரண்டாம் மற்றும் 3-ம் இடங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அதில் 50% பெற்றவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இலங்கை முழுவதும் 12,845 வாக்குச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம் அங்கு 1,59,096 பொதுமக்கள் வாக்களிக்கவுள்ளனர். இன்று நடக்கும் வாக்குப்பதிவுக்காக சுமார் 3 லட்சம் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோடபய ராஜபக்‌ஷா (Gotabaya Rajapaksa) மற்றும் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஆகிய இருவருக்கும் இடையேதான் கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் கோடபய ராஜபக்‌ஷா முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்தவர். சஜித் பிரேமதாச மத்திய வீட்டுவசதித் துறை அமைச்சராகவும் உள்ளார்.

கோடபய ராஜபக்‌ஷா - சஜித் பிரேமதாச
கோடபய ராஜபக்‌ஷா - சஜித் பிரேமதாச
Twitter/@SriLankaTweet

இந்த நிலையில், இன்று காலை புட்டலம் பகுதியில் உள்ள மக்கள், அருகில் உள்ள மன்னார் மாவட்டத்துக்குச் சென்று வாக்களிக்க, சிலபேருந்துகளில் பயணித்துக்கொண்டிருந்துள்ளனர். இரண்டு மாவட்டங்களுக்கும் இடையில், அதாவது பேருந்து சரியாக தந்திரிமளே (Thanthirimale) என்ற கிராமம் வழியாகப் பயணித்துக்கொண்டிருக்கும்போது, அங்கு மறைந்திருந்த மர்மக் கும்பல் சாலையின் நடுவில் எரிந்த வாகன டயரை ஓடவிட்டதாக கூறப்படுகிறது.

இதைப் பார்த்து அதிர்ந்த பேருந்து ஓட்டுநர், நடு வழியிலேயே வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போதும் யாரும் எதிர்பார்க்காத விதமாக அந்த மர்மக் கும்பல் பேருந்தை நோக்கி கற்கள் மற்றும் துப்பாக்கியால் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பாக எந்தத் தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

இலங்கை தேர்தல்
இலங்கை தேர்தல்
AP

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு மற்றும் தாக்குதல்கள் நடந்துவரும் நிலையில், இன்று அதிபர் தேர்தலின்போது நடந்துள்ள இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.