Published:Updated:

உக்ரைன் போர்: காண்போரை கண்கலங்க வைக்கும் தந்தை - மகள் பாசப்போராட்டம் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

உக்ரைன்

அந்த நபருக்கும் அவர் குழந்தைக்கும் இடையேயான பாசப்போராட்டம் காண்போர் நெஞ்சை கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையேயான போர் தாக்குதலில் இதுவரை உக்ரைன் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 130 பேர் உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ரஷ்யாவின் கோர தாக்குதலில் உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. ``நம்மை விட 3 மடங்கு ராணுவ பலம் வாய்ந்த ரஷ்யாவை எதிர்கொள்ள எந்த நாடும் உக்ரைனுக்கு உதவ முன்வரவில்லை. எனவே நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்" என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.

உக்ரைன்
உக்ரைன்

மேலும், `உக்ரைன் நாட்டின் குடிமக்களில் 18 வயது முதல் 60 வயது வரையிலான ஆண்கள் நாட்டின் எல்லையை விட்டு வெளியேற வேண்டாம். மேலும், பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்' என்றும் உக்ரைன் அரசு நேற்றைய தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து ஆண்கள் ரஷ்யப் படையுடன் போராடவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பான இடங்களுக்கு இடப்பெயர்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், உக்ரேனிய தந்தை ஒருவர் தன் பெண் குழந்தையைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப் பேருந்தில் ஏற்றிவிட்டு, கதறி அழும் உருக்கமான காட்சிகள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த நபருக்கும் அவர் குழந்தைக்கும் இடையேயான பாசப்போராட்டம் காண்போர் நெஞ்சை கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism