Published:Updated:

பாகிஸ்தான்: 7 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை... 20 ஆண்டுகளில் இல்லாத அளவு; ஸ்தம்பித்த லாகூர்

பாகிஸ்தானில் மழை ( ட்விட்டர் )

பாகிஸ்தானில் அமைந்திருக்கும் பெரிய நகரமான லாகூரில் சுமார் 7 மணி நேரம் பெய்த கனமழையில் அந்த நகரமே ஸ்தம்பித்து போயிருக்கிறது.

பாகிஸ்தான் மக்கள் ஏற்கெனவே கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக சிரமப்பட்டுவருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தானில் அமைந்துள்ள பெரிய நகரமான லாகூரில் சுமார் ஏழு மணி நேரம் பெய்த கனமழையால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நகரில் அதிகபட்சமாக 238 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏழு மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் காற்று வீசி வருவதால் நகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் கடந்த நான்கு வாரங்களாகப் பெய்த கனமழையால், 160 பெண்கள், குழந்தைகள் உட்பட 282 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் 5,500-க்கும் மேற்பட்ட வீடுகள், பல பாலங்கள் மற்றும் கடைப் பகுதிகள் முழுமையாக சேதமடைந்திருகின்றன எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பாகிஸ்தான்: 7 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை... 20 ஆண்டுகளில் இல்லாத அளவு; ஸ்தம்பித்த லாகூர்

முன்னதாக, பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம், வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று கணித்திருக்கிறது. முன்னறிவிப்பு காலத்தில் அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விழிப்புடன் இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தியது. வரும் நாள்களில் அதிக மழை பெய்யும் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!