Published:Updated:

நொறுக்கப்படும் ஏமன், மூர்க்கத்தனமாகத் தாக்கும் சவுதி கூட்டுப்படை! - என்ன நடக்கிறது வளைகுடாவில்?

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியைக் குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தினர். இதனால், அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் ஒருமாதத்துக்கு டிரோன் விமானங்கள் பறக்க தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறது.

நொறுக்கப்படும் ஏமன், மூர்க்கத்தனமாகத் தாக்கும் சவுதி கூட்டுப்படை! - என்ன நடக்கிறது வளைகுடாவில்?

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியைக் குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தினர். இதனால், அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் ஒருமாதத்துக்கு டிரோன் விமானங்கள் பறக்க தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறது.

Published:Updated:
ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு

சவுதி கூட்டுப்படையினருக்கும், ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடக்கும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துவருகின்றன. அபுதாபி டிரோன் தாக்குதலுக்கு பதிலடிகொடுக்கும்விதமாக சவுதி கூட்டுப்படை ஏமன் சிறைச்சாலையில் நடத்திய வான்வழித் தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதனால் வளைகுடாப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய் கிடங்கு
தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய் கிடங்கு

கடந்த ஜனவரி 17-ம் தேதி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அபுதாபி விமான நிலையம், அதன் அருகிலுள்ள எண்ணெய்க் கிடங்கு உள்ளிட்ட இடங்களில் டிரோன் மூலமாகத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் உட்பட மூன்உ பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அபுதாபியின் தேசிய எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான கிடங்கில் இந்த விபத்து ஏற்பட்டதால், அந்நாட்டின் கச்சா எண்ணெய் விலை கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், முதன்முறையாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியைக் குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தியதால், இதைச் சற்றும் எதிர்பாராத அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் ஒருமாதத்துக்கு ஆளில்லா விமானங்கள் பறக்கவும், இலகு ரக விளையாட்டு விமானங்களைப் பயன்படுத்தவும் தடைவிதித்து உத்தரவிட்டது.

அபுதாபி விமான நிலையம்
அபுதாபி விமான நிலையம்
zawya

இந்த நிலையில், ஹவுதி தாக்குதலுக்கு பதிலடி தரும்விதமாக, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி கூட்டுப்படையினருடன் இணைந்து ஏமன் தலைநகரான சனாவில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் முன்னாள் ராணுவ அதிகாரி உட்பட 14 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 21-ம் தேதி ஏமனின் சடா பகுதியில் இருக்கும் சிறைச்சாலையில் சவுதி கூட்டுப்படை மேற்கொண்ட மற்றொரு தாக்குதல் நடவடிக்கையில், ஆப்பிரிக்க அகதிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஏமன் கொடி
ஏமன் கொடி
AP / Hani Mohammed

சவுதியின் இந்தத் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் ஐ.நா சபை, ``அபுதாபியின் விமான நிலையத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தியது தவறுதான். ஆனால், பதில் தாக்குதல் நடத்துவதாக ஏமன் நாட்டு மக்கள்மீது சவுதி வான்வழித் தாக்குதல் நடத்தியதை ஏற்க முடியாது!" என கண்டனம் தெரிவித்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி அபுதாபி நகரை நோக்கி, மேலும் இரண்டு ஏவுகணைகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவியதாகவும், அவற்றைத் தங்களிடமுள்ள எஃப்.16 போர் விமானம் இடைமறித்து அழித்ததாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்திருக்கிறது.

ஏமனில் கூட்டுப்படை தாக்குதல் (பழைய படம்)
ஏமனில் கூட்டுப்படை தாக்குதல் (பழைய படம்)

இது குறித்து அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தலைநகர் அபுதாபியை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசிய இரு ஏவுகணைகளையும் எங்கள் ராணுவம் தாக்கி அழித்தது. இந்தத் தாக்குதலில் உயிழப்பு எதுவும் நடக்கவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தின் ராணுவம் எந்தவிதமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தயாராதிருக்கிறது. நாட்டைப் பாதுகாக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்!'' எனத் தெரிவித்திருக்கிறது.

வறுமையில் வாடும் ஏமன் குழந்தைகள்
வறுமையில் வாடும் ஏமன் குழந்தைகள்

கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் போர் காரணமாக, இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏமன் நாட்டு மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

போர்ப் பின்னணி:

சவுதி அரேபியாவுக்கும், இரானுக்கும் இடையே பல்லாண்டு காலமாகப் பனிப்போர் நிலவிவருகிறது. தங்களின் பகையைத் தீர்த்துக்கொள்வதற்காக இரண்டு நாடுகளும், ஏமன் நாட்டில் நடக்கும் உள்நாட்டுப்போரை தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு, அந்நாட்டைப் போர்க்களமாகப் பயன்படுத்திவருகின்றன.

சவுதி அரேபியா- இரான் - போர்க்களம் ஏமன்
சவுதி அரேபியா- இரான் - போர்க்களம் ஏமன்

குறிப்பாக, கடந்த 2015-ம் ஆண்டு, மார்ச் மாதம், ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே உள்நாட்டுப்போர் மூண்டது. இந்தப் போரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா களமிறங்கியது. அதேசமயம் ஏமன் அரசை எதிர்த்துப் போராடும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு இரான் ஆதரவளித்தது. இதனால், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் அரசை மட்டுமல்லாமல், அதற்குத் துணைபுரியும் சவுதி அரேபியாவையும் எதிர்த்து தாக்குதல் நடத்திவந்தது. பரஸ்பரம் நீடித்துவந்த இந்தத் தாக்குதலில், தற்போது முதன்முறையாக ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி இலக்காகியிருக்கிறது.

சவுதி அரேபியா
சவுதி அரேபியா

இதற்குக் காரணம், சவுதி தலைமையிலான கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் இடம்பெற்றிருப்பதுதான். எனவே, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படை ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தொடர் தாக்குதல் நடத்திவருகிறது. ஆறாண்டுகளாக நீடித்துவரும் இந்தப் போர் தற்போது தீவிரமடைந்திருப்பதால், வளைகுடா நாடுகள் நிம்மதி இழந்திருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism