Published:Updated:

உக்ரைன் தலைநகர் கீவ்-க்கு 25 கி.மீ... 60 கி.மீ நீளம்கொண்ட பெரும் படையுடன் நெருங்கும் ரஷ்யா!

செயற்கைக்கோள் படம் ( Maxar )

மாக்ஸர் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செயற்கைக்கோள் படத்தில், உக்ரைனின் அன்டோனோவ் விமான நிலையத்திலிருந்து 60 கி.மீ தொலைவுக்கு ரஷ்ய படைகள் அணிவகுத்திருப்பது அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ்-க்கு 25 கி.மீ... 60 கி.மீ நீளம்கொண்ட பெரும் படையுடன் நெருங்கும் ரஷ்யா!

மாக்ஸர் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செயற்கைக்கோள் படத்தில், உக்ரைனின் அன்டோனோவ் விமான நிலையத்திலிருந்து 60 கி.மீ தொலைவுக்கு ரஷ்ய படைகள் அணிவகுத்திருப்பது அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது.

Published:Updated:
செயற்கைக்கோள் படம் ( Maxar )

உக்ரைனில் தொடர்ந்து ஆறாவது நாளாகப் போர் நடைபெற்றுவருகிறது. போருக்கு மத்தியில் உக்ரைனில் வாழும் பல்வேறு நாட்டு மக்களும் போலந்து, ஹங்கேரி, ருமேனியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துவருகின்றனர். இப்படி நாளுக்கு நாள் இன்னும் அதிகமாகப் போர் தீவிரமடைந்துவரும் நிலையில் போரின் தீவிரத்தை வெளிக்காட்டும்விதமாக, மாக்ஸர் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயற்கைக்கோள் படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா போர்
Alexander Zemlianichenko Jr

அந்தப் படங்கள், உக்ரைனின் அன்டோனோவ் விமான நிலையத்திலிருந்து 60 கி.மீ தொலைவுக்கு ரஷ்யப் படைகள் போர் ஆயுதங்கள் மற்றும் ராணுவ வாகனங்களுடன் 40 கி.மீ தூரத்துக்குத் தொடர்ச்சியாக அணிவகுத்திருப்பதை காட்டுகிறது. மேலும் ரஷ்யப் படைகள் அணிவகுத்திருக்கும் சாலைகளில் உள்ள கட்டடங்கள் பெரும்பாலும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பது போன்றும் தெரிகிறது. இதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே பல நூறு உயிரிழப்புகளைக் கண்டுகொண்டிருக்கும் இந்தப் போரி, இப்படி 25 கி.மீ தூரத்தில் பெரும் படையுடன் ரஷ்யா நெருங்கிக்கொண்டிருப்பது இன்னும் கூடுதல் அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது.

நேற்று பெலாரஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்தச் சூழலில் நேட்டோ அமைப்பு, உக்ரைனுக்கு உதவுவதாக நேற்று அறிவித்தது. இது ரஷ்யாவை மேலும் கொதிப்படையைச் செய்தது. நேட்டோவின் இந்த முடிவு, மோசமான விளைவை ஏற்படுத்தும் என ரஷ்யா நேற்று கருத்து தெரிவித்திருந்தது! இந்தச் சூழ்நிலையில் ரஷ்யா பெரும் படையுடன் உக்ரைன் தலைநகரை நோக்கி நகர்வது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism