Published:Updated:

` இராக் போரில் எதிர்கொண்ட துன்பங்கள்!' - புஷ் வரைந்த 98 ஓவியங்களும் சர்ச்சைகளும்

புஷ்
News
புஷ்

அமெரிக்காவின் 43-வது அதிபராக 2001 முதல் 2009-ம் ஆண்டுவரை பதவி வகித்தவர், ஜார்ஜ் டபிள்யூ புஷ்.

ஒரு நாட்டின்மீது நடத்தப்பட்ட போருக்கு வீரர்களை அனுப்பியவரே, போர் வீரர்களை ஓவியமாக வரையும் அதிசயமெல்லாம் அமெரிக்காவில் மட்டுமே சாத்தியம். அமெரிக்காவின் 43-வது அதிபராக 2001 முதல் 2009-ம் ஆண்டுவரை பதவி வகித்தவர், ஜார்ஜ் டபிள்யூ புஷ்.

புஷ்
புஷ்

2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ல், அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட இரட்டைக் கோபுரத் தாக்குதலை அடுத்து, 2001-ல் ஆப்கானிஸ்தான் மீதும் 2003-ல் இராக் மீதும் போர் தொடுக்கப்பட்டது, அதிபர் புஷ் ஆட்சியின் போதுதான். 2009-க்குப் பிறகான காலகட்டத்தில்தான் ஓவியம் வரைவதில் ஈடுபடத் தொடங்கினார். தான் எடுத்துக் கொண்ட ஓவியப் பயிற்சியின் அடிப்படையில், தலைவர்களை ஓவியமாக வரையத் தொடங்கியவர் பிறகு, போர் வீரர்களையும் போர்க் காட்சிகளையும் ஓவியமாக அவர் வரைந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவர் வரைந்த ஓவியங்கள், துணிச்சலின் சித்திரங்கள் (Portraits of courage) என்கிற பெயரில் 2017-ல் புத்தகமாக வெளியிடப்பட்டது. 'அமெரிக்கப் போர் வீரர்களுக்கு ஒரு படைத்தளபதியின் அஞ்சலி' என்று தனது படைப்புகளை புஷ் வர்ணித்தார். புஷ் தொடுத்த இந்தப் போரில், 7,000 வீரர்கள் இறந்தார்கள். 50,000 வீரர்கள் காயமடைந்தார்கள் என்று இறுதியாகக் கிடைத்த தரவுகள் குறிப்பிடுகின்றன.

புஷ்
புஷ்

இவர்களில் 98 வீரர்களைப் பற்றிய ஓவியங்கள் இதில் இடம்பெறுகின்றன. இவர்கள் அனைவரும் போரின்போது எதிர்கொண்ட துன்பங்கள், நாடு திரும்புதல் மற்றும் போர் நடந்த காலகட்டத்தில் அவர்களுடைய மீட்சி ஆகியவை அதிபர் புஷ் ஓவியங்களில் இடம்பெற்றிருக்கும்.

புஷ் வரைந்த ஓவியம்
புஷ் வரைந்த ஓவியம்

இதுநாள் வரை அவருடைய நூலக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்தப் படைப்புகள், முதன்முறையாக வாஷிங்டன் அரசு மாளிகையில், இந்த மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

`தான் செய்த தவறுகளிலிருந்து தன்னைத் தேற்றிக்கொள்வதற்காகவே, ஓவியங்களாக வரைந்துள்ளார் புஷ்' என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.