Published:Updated:

`என்னால் முடியவில்லையென்றால் யாராலும் முடியாது’ - உக்ரைன் விமான பைலட்டின் இறுதி வார்த்தைகள்

தான் போக வேண்டாம் எனக் கூறியும் நம்பிக்கையாகச் சென்றதாக இரான் விமான விபத்தில் உயிரிழந்த பைலட்டின் மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.

இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 170 பயணிகளுடன் உக்ரைன் தலைநகர் கிய்வ் நோக்கிப் புறப்பட்ட போயிங் 737 - 800 ரக உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணித்த பயணிகள் ஒருவர்கூட உயிர்பிழைக்கவில்லை. முன்னதாக விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளானதாகக் கூறப்பட்டது.

விமான தாக்குதல்
விமான தாக்குதல்
AP

ஆனால், உக்ரைன் விமானம் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியிருப்பதாகக் கனடா, அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியிருந்தனர். அதற்கு ஆதாரமாகச் சில குறிப்புகளையும் முன் வைத்தனர். முதலில் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துவந்த இரான், நேற்று தாங்கள்தான் தவறாக விமானத்தைத் தாக்கிவிட்டதாக ஒப்புக்கொண்டனர்.

``அமெரிக்கா கொடுத்து வந்த தொடர் நெருக்கடிகளால் ஏவுகணைத் தாக்குதலின்போது ஏற்பட்ட மனிதப் பிழை, பேரழிவுக்கு வழிவகுத்துவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட எங்கள் நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களிடம் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்” என விமானம் தாக்குதல் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார் இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஸரீஃப்.

விமான தாக்குதல்
விமான தாக்குதல்
AP

இந்நிலையில் உக்ரைன் விமானத்தை இயக்கிய பைலட்டின் மனைவி தன் கணவருடன் இறுதியாகப் பேசியவற்றை ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டுள்ளார். ஸ்கை நியூஸிடம் பேசியுள்ள கேத்ரினா (Katerina), ``இரான், அமெரிக்கா போர் பதற்றத்தால் கெய்வ் - தெஹ்ரான் இடையேயான விமான போக்குவரத்து ரத்து செய்யப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், நடக்கவில்லை.

`அமெரிக்க நெருக்கடியால் பதற்றத்தில் நடந்துவிட்டது’ -  விமானத் தாக்குதலை ஒப்புக்கொண்ட இரான்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடைசியாக நான் அவரிடம் பேசியபோது, `போர் பதற்றம் உருவாகியுள்ளது அதனால் விமானத்தில் செல்ல வேண்டாம். தயவு செய்து இதைச் செய்யாதீர்கள்’ எனக் கூறினேன். ஆனால் அவர், `எங்களால் பின்வாங்க முடியாது. என்னால் இதைச் செய்ய முடியவில்லை என்றால் வேறு யாராலும் முடியாது. நான் விமானத்தை இயக்க வேண்டும் என அட்டவணை போடப்பட்டுவிட்டது. நான் பறந்தாக வேண்டும்’ என்று கூறினார். விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுள்ளது. அதன் உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார் கேத்ரினா.

பைலட்டின் மனைவி
பைலட்டின் மனைவி
Sky news

பைலட் காபோனென்கோ (Gaponenko) - கேத்ரினா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர் பல வருடங்களாக விமான பைலட்டாகப் பணியாற்றி வந்துள்ளார். இறுதியாக மிகவும் இக்கட்டான சூழலில்கூட தன் பயணிகளைத் தவிக்கவிடக் கூடாது என்பதற்காகப் பதற்றம் அறிந்தே விமானத்தை இயக்கியுள்ளதாக அவரின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு