Published:Updated:

``ஜெலன்ஸ்கி - புதின் இடையே மத்தியஸ்தராக மோடி விரும்பினால் வரவேற்போம்" - உக்ரைன் அமைச்சர்

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா

``உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும், ரஷ்ய அதிபர் புதினுக்கும் இடையில் பிரதமர் நரேந்திர மோடி மத்தியஸ்தராக இருக்க விரும்பினால் வரவேற்போம்" என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

``ஜெலன்ஸ்கி - புதின் இடையே மத்தியஸ்தராக மோடி விரும்பினால் வரவேற்போம்" - உக்ரைன் அமைச்சர்

``உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும், ரஷ்ய அதிபர் புதினுக்கும் இடையில் பிரதமர் நரேந்திர மோடி மத்தியஸ்தராக இருக்க விரும்பினால் வரவேற்போம்" என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Published:Updated:
உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 36-வது நாளாகப் போர் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. போர் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை, 1,119 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 1,790 பேர் காயமடைந்ததாகவும் ஐ.நா மனித உரிமை அலுவலகம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் இந்தியா யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்துவருகிறது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா (Dmytro Kuleba), ``அதிபர் ஜெலன்ஸ்கிக்கும், அதிபர் புதினுக்கும் இடையில் பிரதமர் நரேந்திர மோடி மத்தியஸ்தராக இருக்க விரும்பினால் ஏற்றுக்கொள்வோம்" எனக் கூறியுள்ளார்.

அந்தப் பேட்டியில், ``உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கும், ரஷ்ய அதிபர் புதினுக்கும் இடையில் பிரதமர் நரேந்திர மோடி மத்தியஸ்தராக இருப்பதை விரும்புகிறீர்களா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு டிமிட்ரோ குலேபா, ``பிரதமர் மோடி அதை விரும்பினால், அவருடைய முயற்சிகளை நாங்கள் வரவேற்போம்” என பதிலளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

தொடர்ந்து பேசிய டிமிட்ரோ குலேபா, ``நாங்கள் எப்போதும் இந்திய உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பவர்களில் ஒருவராக இருந்துவருகிறோம். இது வழக்கத்துக்கு மாறாக நன்மை பயக்கும் உறவு. ரஷ்யாவுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவைப் பயன்படுத்தி போரை நிறுத்துமாறும், புதினை சமாதானப்படுத்துமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். போரை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பது பற்றி நீங்கள் (இந்தியா) அவருடன் (புதினுடனுன்) நேரடியாகப் பேச வேண்டும். இந்த கிரகத்தில் இப்போரை விரும்பும் ஒரே நபர் புதின்தான். உக்ரைனுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism