Published:Updated:

``இம்ரானைக் கைது செய்தால் பாகிஸ்தான் இலங்கையாக மாறும்!" - ஷெபாஷை எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ( Anjum Naveed )

``இம்ரான் கான் கைது செய்யப்பட்டால், பாகிஸ்தான் இலங்கையாக மாறும்" என பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அரசுக்கு பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, கடந்த மாதம் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் விளைவாக, இம்ரான் கான் தனது பிரதமர் பதவியை இழக்க நேரிட்டது. அதைத்தொடர்ந்து, பாகிஸ்தானின் புதியப் பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் பதவியேற்றார். ஷெபாஷ் ஷெரீப் பதவியேற்ற நாள்முதலே, இம்ரான் கானுக்கு எதிராக புதிய அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது. இதற்கு இம்ரான் கானும் தன் பங்குக்கு, ``பாகிஸ்தான் தற்போது திருடர்கள் கையில் சிக்கியிருக்கிறது. இதற்கு பாகிஸ்தானில் அணுகுண்டு விழுந்திருக்கலாம்" என ஷெபாஷ் ஷெரீப்பையும், அவரின் அரசையும் விமர்சித்திருந்தார்.

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது

அதைத்தொடர்ந்து பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், இம்ரான் கான் உள்நாட்டுப் போரைத் தூண்டுவதற்கு திட்டமிட்டிருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது, ``​​இம்ரான் கான் ஒருவேளை கைது செய்யப்பட்டால் பாகிஸ்தான் இலங்கையாக மாறும். அதற்கு தற்போதைய அரசுதான் பொறுப்பு. ஆனால், பாகிஸ்தான் இலங்கையாக மாறுவதை நான் விரும்பவில்லை. நாடும் இயல்புநிலையை நெருங்கிவருகிறது" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism