Published:Updated:

``ஒருவேளை புதின் கலந்துகொண்டிருந்தால்..!"- ஜி-20 மாநாட்டில் உக்ரைன் போர் குறித்துப் பேசிய ரிஷி சுனக்

ரிஷி சுனக் ( Leon Neal )

``உக்ரைன்மீது நடத்தப்படும் காட்டுமிராண்டித்தனமான போர் நிறுத்தப்பட வேண்டும். உலக நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சவால்களுக்கு இந்த மோதல்தான் காரணம்." - ரிஷி சுனக்

``ஒருவேளை புதின் கலந்துகொண்டிருந்தால்..!"- ஜி-20 மாநாட்டில் உக்ரைன் போர் குறித்துப் பேசிய ரிஷி சுனக்

``உக்ரைன்மீது நடத்தப்படும் காட்டுமிராண்டித்தனமான போர் நிறுத்தப்பட வேண்டும். உலக நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சவால்களுக்கு இந்த மோதல்தான் காரணம்." - ரிஷி சுனக்

Published:Updated:
ரிஷி சுனக் ( Leon Neal )

உலக நாடுகள் பெரிதும் எதிர்பார்த்த ஜி- 20 உச்சிமாநாடு இன்றும், நாளையும் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறுகிறது. இந்த ஜி-20 உச்சிமாநாட்டு அமர்வில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில், மாநாட்டில் கலந்துகொண்ட இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ``ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பார்த்துக்கொண்டிருப்பதைப்போல, எந்த நாடும் தன் அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கக் கூடாது. உக்ரைன்மீது நடத்தப்படும் காட்டுமிராண்டித்தனமான போர், நிறுத்தப்பட வேண்டும். உலக நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சவால்களுக்கு இந்த மோதல்தான் காரணம்.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்
KEVIN LAMARQUE

இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக் கொள்கைகளுக்கும் எதிராக ரஷ்யா, உக்ரைன்மீது நடத்தும் இந்தச் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகள் நம் அனைவருக்குள்ளும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. நாம் அனைவரும் சர்வதேச ஒழுங்கின் அடித்தளமான இந்தக் கொள்கைகளைச் சார்ந்துதான் இருக்கிறோம். எனவே, அவற்றை நாம் காப்பாற்ற வேண்டும். எந்த நாடும் அண்டை நாடுகளின்மீதும், அதன் குடிகளின்மீதும் தாக்குதல்களை நடத்தக் கூடாது . அணுசக்தி தாக்குதல்கள் கூடாது.

மாஸ்கோவின் இந்தச் செயலால் உலக அளவில் பொருளாதாரப் பிரச்னைகள் நிலவுகின்றன. அதோடு, ரஷ்யா ஏற்றுமதிகளைத் தடைசெய்ததன் மூலம், உலக அளவில் மக்கள் பலர் உணவுக்காக அல்லல்படுகிறார்கள்" என்றார்.

புதின்
புதின்

தொடர்ந்து பேசிய அவர், ``ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஜி-20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்டிருந்தால், உக்ரைன்மீது நடத்தப்படும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துப் பேசியிருக்கலாம்" எனக் கூறினார்.