Published:Updated:

`புதின் குறித்த அந்தக் கருத்துக்கு மன்னிப்புக் கேட்க முடியாது!’ - ஜோ பைடன் விளக்கம்

ஜோ பைடன் ( Evan Vucci )

``புதின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்ற என்னுடைய தார்மிகக் கோபத்தை வெளிப்படுத்தினேன்” என ஜோ பைடன் விளக்களித்திருக்கிறார்.

`புதின் குறித்த அந்தக் கருத்துக்கு மன்னிப்புக் கேட்க முடியாது!’ - ஜோ பைடன் விளக்கம்

``புதின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்ற என்னுடைய தார்மிகக் கோபத்தை வெளிப்படுத்தினேன்” என ஜோ பைடன் விளக்களித்திருக்கிறார்.

Published:Updated:
ஜோ பைடன் ( Evan Vucci )

உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பயணம் மேற்கொண்டார். ஜோ பைடன் அமெரிக்க வீரர்கள் மற்றும் நேட்டோ படையில் உள்ள வீரர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், ``கடவுள் அருளால் இந்த மனிதர் (புதின்) ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாது. நேட்டோ அமைப்பில் பிளவை ஏற்படுத்த விளாடிமிர் புதின் முயல்கிறார். ஆனால், அவரால் அது முடியவில்லை. நாம் அனைவரும் ஒன்றாக, உறுதுணையாக இருக்கிறோம்' என்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்துக்கு அழைப்பு விடுப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்த நிலையில், அதன் பிறகு வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், அதற்கு விளக்கமளித்தார்.

விளாடிமிர் புதின்
விளாடிமிர் புதின்

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ஜோ பைடன், ``புதின் பற்றிக் கூறிய எனது கருத்தைப் பின்வாங்கவில்லை. அதற்காக நான் மன்னிப்பும் கேட்கப்போவதில்லை. நான் என்னுடைய தார்மிகக் கோபத்தை வெளிப்படுத்தினேன். அது நாட்டின் கொள்கை முடிவு இல்லை" எனக் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism