Published:Updated:

``இம்ரான் கான் மீது கைவைத்தால் தற்கொலைத் தாக்குதல் நடத்துவேன்" - பாகிஸ்தான் எம்.பி மிரட்டல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ( Anjum Naveed )

``இம்ரான் கானின் தலைமுடி பாதிக்கப்பட்டால்கூட, உங்கள் குழந்தை உட்பட நீங்கள் யாரும் இருக்க மாட்டீர்கள். உங்களைச் சும்மா விடமாட்டேன்." - பாகிஸ்தான் எம்.பி அதாவுல்லா

``இம்ரான் கான் மீது கைவைத்தால் தற்கொலைத் தாக்குதல் நடத்துவேன்" - பாகிஸ்தான் எம்.பி மிரட்டல்

``இம்ரான் கானின் தலைமுடி பாதிக்கப்பட்டால்கூட, உங்கள் குழந்தை உட்பட நீங்கள் யாரும் இருக்க மாட்டீர்கள். உங்களைச் சும்மா விடமாட்டேன்." - பாகிஸ்தான் எம்.பி அதாவுல்லா

Published:Updated:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ( Anjum Naveed )

இரண்டு மாதங்களுக்கு முன்பு, அப்போதைய பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம், ஆட்சி கவிழ்ந்து பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார். ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகப் பதவியேற்ற நாள் முதலே பாகிஸ்தான் அரசு, முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திவந்தது.

சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து பின்னர் கடைசி நேரத்தில் போராட்டத்தைக் கைவிட்ட இம்ரான் கான், ``தேர்தலை அறிவிக்காவிட்டால் பாகிஸ்தானில் உள்நாட்டுப் போர் ஏற்படும்" என எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், தன்னைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகவும் இம்ரான் கான் கூறிவந்தார். இந்த நிலையில், இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த எம்.பி அதாவுல்லா, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஷெபாஸ் ஷெரீப்
ஷெபாஸ் ஷெரீப்

இது தொடர்பாக ட்விட்டரில் வெளியான வீடியோவில் பேசியிருந்த அதாவுல்லா, ``இம்ரான் கானின் தலைமுடி பாதிக்கப்பட்டால்கூட, உங்கள் குழந்தை உட்பட நீங்கள் யாரும் இருக்க மாட்டீர்கள். உங்களைச் சும்மா விடமாட்டேன். உங்கள்மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். இதைச் செய்ய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தயாராக உள்ளனர்" என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் இதேபோல், இம்ரான் கான் ஆதரவாளரான ஹசன் நியாசி, ``இம்ரான் கானுக்கு எதிராக எது நடந்தாலும், அது பாகிஸ்தான் மீது நடத்தப்படும் தாக்குதலாகவே கருதப்படும். அதற்கு பதிலடியும் பயங்கரமானதாக இருக்கும்" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism