Published:Updated:

``பாகிஸ்தான் மூன்று பகுதிகளாகப் பிரியும் அபாயம் இருக்கிறது!" - எச்சரிக்கும் இம்ரான் கான்

இம்ரான் கான்

`பாகிஸ்தான் நிர்வாகம் சரியான முடிவுகளை எடுக்காவிட்டால், மோசமான அழிவைச் சந்திக்கும்' என இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

``பாகிஸ்தான் மூன்று பகுதிகளாகப் பிரியும் அபாயம் இருக்கிறது!" - எச்சரிக்கும் இம்ரான் கான்

`பாகிஸ்தான் நிர்வாகம் சரியான முடிவுகளை எடுக்காவிட்டால், மோசமான அழிவைச் சந்திக்கும்' என இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Published:Updated:
இம்ரான் கான்

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துவரும் நிலையில், அண்மையில் இம்ரான் கான் தலைமையிலான அரசுமீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற்றதால், இம்ரான் கான் அரசு கவிழ்ந்து, அவர் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வுசெய்யப்பட்டார்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

இந்தச் சூழலில், பாகிஸ்தானின் தற்போதைய நிலை குறித்து இம்ரான் கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``பாகிஸ்தானின் நிர்வாகக் கட்டமைப்பில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகத் தெரிகிறது. நிர்வாகம் சரியான முடிவுகளை எடுக்காவிட்டால், அணு ஆயுதங்களை இழக்க நேரிடும். இதனால் பாகிஸ்தான் மூன்றாகப் பிரிந்துவிடும் சூழல் ஏற்படும். நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால், உக்ரைன் நாட்டில் கடந்த 1990-களில் நடந்ததைப்போல, உலக நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக பாகிஸ்தானும் தனது அணு ஆயுத பலத்தை இழக்க நேரிடும்'' என்றார்.

இம்ரான் கானின் இந்தப் பேச்சுக்கு அந்த நாட்டின் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism