Published:Updated:

``புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை இம்ரான் இடைக்கால பிரதமராக நீடிப்பார்!' - பாக்., அதிபர் அறிவிப்பு

இம்ரான் கான்

பாகிஸ்தானில் பிரதமர் நியமிக்கப்படும் வரை இம்ரான் கான் இடைக்காலப் பிரதமராக நீடிப்பார் என அந்த நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி தெரிவித்திருக்கிறார்.

``புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை இம்ரான் இடைக்கால பிரதமராக நீடிப்பார்!' - பாக்., அதிபர் அறிவிப்பு

பாகிஸ்தானில் பிரதமர் நியமிக்கப்படும் வரை இம்ரான் கான் இடைக்காலப் பிரதமராக நீடிப்பார் என அந்த நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
இம்ரான் கான்

பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசைக் கலைக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கிவந்தன. அதைத் தொடர்ந்து நேற்று நடக்கவிருந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பைத் துணைச் சபாநாயகர் குவாஸிம் கான் சுரி நிராகரித்த நிலையில், விரைவில் தேர்தல் நடைபெற வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிபர் ஆரிஃப் ஆல்விக்குப் பரிந்துரை செய்தார். அதையேற்ற அதிபரும் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். மேலும் 90 நாள்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் நாடாளுமன்றம்
பாகிஸ்தான் நாடாளுமன்றம்

பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி, எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், அதிபரின் அனைத்து உத்தரவுகளும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டதாக இருக்கும் என்று பாகிஸ்தான் தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி இது தொடர்பாகத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``பாகிஸ்தான் அரசியலமைப்பின் 22 ஏ (4) பிரிவின் கீழ் பாகிஸ்தானில் பிரதமர் நியமிக்கப்படும் வரை இம்ரான் கான் இடைக்காலப் பிரதமராக நீடிப்பார்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism