Published:Updated:

பாகிஸ்தான்: பதவி விலகும் இம்ரான் கான்? - `YouTube' பெயர் மாற்றப்பட்டதால் வலுக்கும் சந்தேகம்!

இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் தனது ராஜினாமா தொடர்பாக அறிவிப்பார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருந்துவருகின்றன.

பாகிஸ்தான்: பதவி விலகும் இம்ரான் கான்? - `YouTube' பெயர் மாற்றப்பட்டதால் வலுக்கும் சந்தேகம்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் தனது ராஜினாமா தொடர்பாக அறிவிப்பார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருந்துவருகின்றன.

Published:Updated:
இம்ரான் கான்

பாகிஸ்தான் கடந்த சில வருடங்களாகவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ``இம்ரான் கான் சரியாக அரசை வழிநடத்தவில்லை. அதனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும்" எனச் சொந்தக் கட்சியினர் உட்படப் பலரும் அவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவருகின்றனர்.

இது குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா ரியாஸ் கூறும்போது, ``இம்ரான் கான் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார். அரசின் கொள்கைகளில் திருப்தியடையாத உறுப்பினர்களில் சிலர் ஓர் அணியாக இருக்கிறோம். மக்கள் அவர்மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர்'' என்றார்.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தனர். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது, நாளை வாக்கெடுப்பு நடத்தப்படவிருக்கிறது. எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியும் சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருப்பது பாகிஸ்தான் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 யூ-டியூப்
யூ-டியூப்

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் தனது ராஜினாமா தொடர்பாக அறிவிப்பார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருந்துவருகின்றன.

அதற்கு வலுசேர்க்கும் விதமாகப் பிரதமரின் அதிகாரப்பூர்வ யூ டியூப் கணக்கின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த யூ டியூப் கணக்கின் பெயர் ’பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் (PMO)’ என்றுதான் இருக்கும். தற்போது அதுவெறும், `இம்ரான் கான்' என்று மாற்றப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism