Published:Updated:

`இதைச் சொன்னவர் `ஐன்ஸ்டீன்’ கான்!’- பாகிஸ்தான் பிரதமர் இம்ரானை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்

பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் நைலா இனாயத்(Naila Inayat) சமீபத்தில் வெளியிட்ட காணொலிதான் இம்ரானை ட்ரோல் செய்வதற்கு காரணமாக அமைந்தது.

இம்ரான் கான்
இம்ரான் கான்

``மரங்கள் இரவில் ஆக்சிஜனை வெளியிடுகின்றன" என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசிய காணொலி தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

இம்ரான் கான்
இம்ரான் கான்

பாகிஸ்தானைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலர், தங்களது கருத்துகளால் இப்படி இணையத்தில் பரபரப்பாகி வருவது வழக்கமாகிவிட்டது. இம்முறை பாகிஸ்தான் பிரதமர் இந்த வைரல் வலையில் சிக்கியுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் நைலா இனாயத்(Naila Inayat) சமீபத்தில் வெளியிட்ட காணொலி ஒன்றில், ``மரங்கள் இரவில் ஆக்சிஜனை வெளியிடுகின்றன" எனக் கூறியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். 15 நொடிகள் கொண்ட இந்தக் காணொலி 'மரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன- சொல்கிறார் ஐன்ஸ்டீன் கான்' என்ற பெயரில் பகிரப்பட்டு வருகிறது.

அந்தக் காணொலியில் ``கடந்த 10 வருடங்களில் 70 சதவிகித மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதன் விளைவுகளை நாம் கண்டிப்பாக சந்திக்க நேரிடும். ஏனெனில் மரங்கள் இரவில் ஆக்சிஜனை வெளியிடுகின்றன. மேலும், கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை (carbon -di-oxide) உள்வாங்கிக் கொள்கின்றன" என்று அவர் கூறுவதாக காணொலி தொடர்கிறது. இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அவரைக் கலாய்த்து ட்விட்டரில் கமென்டுகளைப் பறக்கவிட்டு வருகின்றனர்.