Published:Updated:

நிலச்சரிவில் புதைந்த வீடு; 20 மணி நேர மீட்புப்பணி... குளிர்சாதனப் பெட்டியில் ஒளிந்து தப்பிய சிறுவன்!

நிலச்சரிவில் சிக்கிய சிறுவனை அதிகாரிகள் மீட்டனர் ( Twitter )

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல் தாக்கியதால் நிலச்சரிவில் புதைந்த வீட்டுக்குள், குளிர்சாதனப்பெட்டியில் தஞ்சமடைந்திருந்த 11 வயது சிறுவன், 20 மணி நேரத்துக்குப் பிறகு மீட்புப் படையினரால் உயிருடன் மீட்கப்பட்டான்.

நிலச்சரிவில் புதைந்த வீடு; 20 மணி நேர மீட்புப்பணி... குளிர்சாதனப் பெட்டியில் ஒளிந்து தப்பிய சிறுவன்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல் தாக்கியதால் நிலச்சரிவில் புதைந்த வீட்டுக்குள், குளிர்சாதனப்பெட்டியில் தஞ்சமடைந்திருந்த 11 வயது சிறுவன், 20 மணி நேரத்துக்குப் பிறகு மீட்புப் படையினரால் உயிருடன் மீட்கப்பட்டான்.

Published:Updated:
நிலச்சரிவில் சிக்கிய சிறுவனை அதிகாரிகள் மீட்டனர் ( Twitter )

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட மெகி புயலால், அந்நாட்டின் பேபே (Baybay) நகரில் 172 பேர் பரிதாபமாக உயிரிந்தனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புயல் காரணமாக லட்சகணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளைவிட்டு வெளியறவேண்டிய சூழல் உருவாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துவருகின்றனர்.

இதற்கிடையில், புயலில் காணாமல்போனவர்கள் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளை மீட்புப் படையினர் மேற்கொண்டுவருகின்றனர். இந்த மீட்புப் பணியில் ஓர் அதிசயமாக, நிலச்சரிவின்போது மண்ணில் புதைந்த வீட்டுக்குள், குளிர்சாதனப்பெட்டியில் தஞ்சமடைந்திருந்த 11 வயது சிறுவன், 20 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறான்.

பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ்
Twitter

இது தொடர்பாக நியூயார்க் போஸ்ட் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ``பேபே நகரில், கடந்த வெள்ளிக்கிழமை சி.ஜே.ஜாஸ்மி என்ற 11 வயது சிறுவன், தன் குடும்பத்துடன் வீட்டில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் அவர்களின் வீடு புதைந்தது. அதில் பயந்துபோன அச்சிறுவன் ஓடிச் சென்று ஒரு குளிர்சாதனப் பெட்டிக்குள் ஒளிந்துகொண்டான். பின்னர் அப்பகுதியில், பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட மீட்புப்படையினர், 20 மணி நேரத்துக்கும் மேலாக குளிர்சாதனப்பெட்டிக்குள் தஞ்சமடைந்திருந்த சிறுவனை உயிருடன் மீட்டுள்ளனர்.

இது குறித்துப் பேசிய மீட்புப்படை அதிகாரி ஒருவர், ``குளிர்சாதனப் பெட்டியிலிருந்து அச்சிறுவனை மீட்ட பிறகு, கண்விழித்தவுடனேயே முதலில் தனக்கு பசியாக இருப்பதாக சிறுவன் கூறினான்" எனத் தெரிவித்தார். மேலும் இந்த நிலச்சரிவில், அச்சிறுவனின் தாயும் அண்ணனும் காணாமல்போய்விட்டதாகவும், தந்தை இறந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்" எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் மீட்புப் பணியின்போது எதிர்பாராதவிதமாக ஜாஸ்மியின் கால் உடைந்துவிட்டதாகவும், ஜாஸ்மி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism