Published:Updated:

மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை: `எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை’ - ரஷ்யா; `சிறிய முன்னேற்றம்’ -உக்ரைன்

உக்ரைன்-ரஷ்யா மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி

பெலாரஸில் நேற்று நடைபெற்ற ரஷ்ய - உக்ரைன் மூன்றாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையிலும் ஆக்கபூர்வமான முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை: `எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை’ - ரஷ்யா; `சிறிய முன்னேற்றம்’ -உக்ரைன்

பெலாரஸில் நேற்று நடைபெற்ற ரஷ்ய - உக்ரைன் மூன்றாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையிலும் ஆக்கபூர்வமான முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

Published:Updated:
உக்ரைன்-ரஷ்யா மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின் பேரில் கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ம் தேதி ரஷ்யப் படைகள் உக்ரைனில் போர்செய்யத் தொடங்கின. 12 நாள்களைக் கடந்தும், இரு நாடுகளுக்கிடையே இன்னும் சமரசமான முடிவுகள் ஏதும் எடுக்கப்படாததால் 13-வது நாளாகப் போர் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. போரை நிறுத்துவதற்காக ரஷ்யத் தரப்பினரும், உக்ரைன் தரப்பினரும் ஏற்கெனவே இரண்டுமுறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த இரண்டுமுறையும் பேச்சுவார்த்தையில் எந்தவொரு குறிப்பிடத்தகுந்த முடிவுகள் எடுக்கப்படாததால், உக்ரைனில் போர் தொடர்ந்த வண்ணமே இருந்தது. இந்த நிலையில், ரஷ்ய அதிகாரிகள் மற்றும் உக்ரைன் அதிகாரிகள் அடங்கிய பேச்சுவார்தைக்குழு மீண்டும் நேற்று பெலாரஸில் மூன்றாவது முறையாகப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இம்முறையும் பேச்சுவார்த்தையில் எந்தவித ஆக்கபூர்வ முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

உக்ரைன்-ரஷ்யா  பேச்சுவார்த்தை
உக்ரைன்-ரஷ்யா பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பேசிய ரஷ்யக்குழுத் தலைவர் மெடின்ஸ்கி, ``மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், அரசியல் மற்றும் ராணுவம் குறித்த உரையாடல்கள் நடைபெற்றன. ஆனாலும் எங்களது எதிர்பார்ப்புகள் ஏதும் பேச்சுவார்த்தையில் நிறைவேறவில்லை. அடுத்தமுறை இன்னும் குறிப்பிடத்தகுந்த முடிவுகள் எடுப்போம் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

மேலும், "மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன. மனிதாபிமான அடிப்படையில் சிறிய நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அடிப்படை அரசியல் நிலைப்பாடுகள் குறித்த தீவிர ஆலோசனைகள், பாதுகாப்பு விதிமுறைகளின்படி தொடர்கின்றன" என உக்ரைன் அதிபரின் அலுவலக ஆலோசனைத் தலைவர் போடோலியாக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!