Published:Updated:

ரஷ்யா-உக்ரைன்: `2.8 மில்லியன் அப்பாவி மக்களைக் குறிவைக்கும் ரஷ்யா' -தொடர்ந்து எச்சரிக்கும் ஜோ பைடன்!

பைடன் ( Evan Vucci )

"ரஷ்யா தனது திட்டங்களைத் தொடர்ந்தால், அது பேரழிவைச் சந்திக்க நேரிடும்" என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் கூறியுள்ளார்.

ரஷ்யா-உக்ரைன்: `2.8 மில்லியன் அப்பாவி மக்களைக் குறிவைக்கும் ரஷ்யா' -தொடர்ந்து எச்சரிக்கும் ஜோ பைடன்!

"ரஷ்யா தனது திட்டங்களைத் தொடர்ந்தால், அது பேரழிவைச் சந்திக்க நேரிடும்" என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் கூறியுள்ளார்.

Published:Updated:
பைடன் ( Evan Vucci )

ரஷ்யா-உக்ரைன் விவகாரம் எந்த நேரத்திலும் போர் வெடிக்கும் சூழ்நிலையிலேயே இன்னும் உள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நேற்று வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் ஜோ பைடன், "அமெரிக்கா மற்றும் நமது நட்பு நாடுகள் அனைத்தும் நேட்டோ-வின் நாடுகளை ஒவ்வோர் அங்குலமாக அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கத் தயாராக உள்ளன. நாங்கள் உக்ரைனில் சண்டையிட, படைகளை அனுப்ப மாட்டோம். ஆனால் உக்ரேனிய மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்" எனக் கூறினார்.

உக்ரைன் பிரச்னை
உக்ரைன் பிரச்னை
ஹாசிப் கான்

மேலும் தொடர்ந்து பேசிய ஜோ பைடன், "பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள டான்பாஸில், உக்ரைன் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய மக்களுக்குத் தந்த தகவல்களுக்கு ஆதாரம் ஏதும் இல்லை. வரும் வாரம் அல்லது வரும் நாள்களில் உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுக்க வாய்ப்புள்ளது. மேலும் அவர்கள் 2.8 மில்லியன் அப்பாவி மக்களைக்கொண்ட உக்ரைன் தலைநகரான கியேவை-தான் அவர்கள் குறிவைப்பார்கள் என நம்புகிறோம். ஆனால், ரஷ்யா தனது திட்டங்களைத் தொடர்ந்தால் அது தேவையற்ற போரை தேர்வு செய்ததற்குப் பொறுப்பாகும். அதுமட்டுமல்லாமல் ரஷ்யா பேரழிவையும் சந்திக்க நேரிடும்" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism