Published:Updated:

ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா தீர்மானம்; மீண்டும் வாக்களிக்காமல் புறக்கணித்தது இந்தியா!

இந்தியா

உக்ரைனில் மனித உரிமைகள் நிலைமை குறித்த வரைவுத் தீர்மானத்தின் மீது 32 நாடுகள் ஆதரவாகவும், ரஷ்யா மற்றும் எரித்தியா ஆகிய இரண்டு நாடுகள் எதிராகவும், இந்தியா, சீனா, பாகிஸ்தான், சூடான் மற்றும் வெனிசுலா உட்பட 13 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளன.

ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா தீர்மானம்; மீண்டும் வாக்களிக்காமல் புறக்கணித்தது இந்தியா!

உக்ரைனில் மனித உரிமைகள் நிலைமை குறித்த வரைவுத் தீர்மானத்தின் மீது 32 நாடுகள் ஆதரவாகவும், ரஷ்யா மற்றும் எரித்தியா ஆகிய இரண்டு நாடுகள் எதிராகவும், இந்தியா, சீனா, பாகிஸ்தான், சூடான் மற்றும் வெனிசுலா உட்பட 13 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளன.

Published:Updated:
இந்தியா

உக்ரைன் - ரஷ்யா போர் தீவிரமடையத் தொடங்கியபோது, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தன.

அப்போது அதன் மீது நடைபெற்ற வாக்கெடுப்பைப் புறக்கணித்து, நடுநிலை வகித்தது இந்தியா. ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த தீர்மானத்தை ரத்து செய்தது.

உக்ரைன்
உக்ரைன்

அதைத் தொடர்ந்து, இந்த பிரச்னை பற்றி விவாதிப்பதற்காக ஐ.நா பொதுச்சபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு முடிவுசெய்யப்பட்டது. அதற்காக, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பையும் புறக்கணித்து, இந்தியா நடுநிலை வகித்தது.

இந்தச் சூழலில், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா சபையில் மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், சர்வதேச சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், பேச்சுவார்த்தை உள்ளிட்ட அமைதி வழிகளில் பிரச்னைக்கு ரஷ்யா தீர்வுகாண வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐ.நா சபை
ஐ.நா சபை
John Minchillo

வாக்கெடுப்புக்குப் பிறகு பேசிய ஐ.நா சபைக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, ``உக்ரைனில் நிலைமை மோசமடைந்து வருவது குறித்து இந்தியா கவலை கொள்கிறது. மேலும், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சி மூலமாக பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் விசாரிக்க, சுதந்திரமான சர்வதேச விசாரணைக் குழுவை அமைக்க ஐ.நா முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட மனித உரிமைகள் கவுன்சில் வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில், உலக நாடுகள் இந்தியாவின் முடிவை எதிர்பார்த்திருந்தன. ஆனால் இந்தியா இதிலும் வாக்களிக்காமல் புறக்கணித்தது.

உக்ரைன்
உக்ரைன்

மேலும், 47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில், உக்ரைனில் மனித உரிமைகள் நிலைமை குறித்த வரைவுத் தீர்மானத்தின் மீது 32 நாடுகள் ஆதரவாகவும், ரஷ்யா மற்றும் எரித்தியா ஆகிய இரண்டு நாடுகள் எதிராகவும், இந்தியா, சீனா, பாகிஸ்தான், சூடான் மற்றும் வெனிசுலா உட்பட 13 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism