Published:Updated:

ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா தீர்மானம்; 5-வது முறையாக வாக்களிக்காமல் புறக்கணித்த இந்தியா!

ஐ.நா - இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி ( ட்விட்டர் )

உக்ரைனில் நிகழும் மனிதாபிமான நெருக்கடி குறித்து ஐ.நா பொதுச்சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 140 நாடுகளின் ஆதரவுடன் ரஷ்யாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உக்ரைனில் கடந்த ஒரு மாத காலமாக, ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவின்பேரில் ரஷ்யப் படையினர் போர் நடத்திவருகின்றனர். இதனால் வாழ்வாதாரரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் உக்ரைன் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்தச் செயலுக்கு மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதித்துவருகின்றன. இந்த நிலையில், உக்ரைனில் நிலவும் மிகப்பெரிய நெருக்கடி குறித்து ஐ.நா பொதுச்சபையில், `உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பின் மனிதாபிமான விளைவுகள்' என்ற தலைப்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஐ.நா பொதுச்சபை
ஐ.நா பொதுச்சபை

இந்த வாக்கெடுப்பில், 5-வது முறையாக இந்தியா மீண்டும் வாக்களிப்பதைப் புறக்கணித்துவிட்டது. இந்தியா மட்டுமல்லாமல் சீனா உட்பட மொத்தம் 38 நாடுகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தன. இருப்பினும் ரஷ்யாவுக்கு எதிராக 140 நாடுகளும், ரஷ்யா உட்பட ஐந்து நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் வாக்களித்தன. இதன் மூலம் 140-5 வாக்கு அடிப்படையில் ரஷ்யாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து நேற்று பேசிய ஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, ``ஐ.நா-வின் முன்முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இந்த வரைவுத் தீர்மானம் நாம் எதிர்பார்த்த கவனத்தை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திலிருந்து விலகியதால், போர் நிறுத்தம் மற்றும் அவசர மனிதாபிமான உதவி ஆகியவற்றில் கவனம் செலுத்துவது இப்போது நமக்குத் தேவை" என்று கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism