Published:Updated:

``இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள்" - சீன வெளியுறவுத்துறை அமைச்சர்

ஜெய்சங்கர் - வாங் யீ ( ட்விட்டர் )

``இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்கள் இல்லை, கூட்டாளிகள்" என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்திருக்கிறார்.

``இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள்" - சீன வெளியுறவுத்துறை அமைச்சர்

``இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்கள் இல்லை, கூட்டாளிகள்" என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ஜெய்சங்கர் - வாங் யீ ( ட்விட்டர் )

2 ஆண்டுகளுக்குப் பிறகு, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ அரசு முறை பயணமாக வியாழக்கிழமை (25-ம் தேதி ) மாலை டெல்லி வந்தார். அப்போது சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யீ , தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது இந்திய, சீன உறவு குறித்த முக்கியமான விஷயங்கள் அதில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சீன வெளியுறவுத் துறை அமைச்சர்
சீன வெளியுறவுத் துறை அமைச்சர்
ட்விட்டர்

இதையொட்டி, சீனாவின் தலைநகர் பீஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த வாங் யீ (WANG YI), தனது இந்திய பயணம் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், ``இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை வரையறுக்கவோ அல்லது தடுக்கவோ அனுமதிக்கக்கூடாது. இரண்டு நாடுகளும் ஒன்றுக்கொன்று அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதி செய்வது மற்றும் நடைமுறை சிக்கல்களை சரியான விதத்தில் கையாண்டு தீர்த்து வைப்பது போன்றவற்றில் ஒருமித்த கருத்தை கடைபிடிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!