Published:Updated:

இந்திய, சீன பிரச்னைக்கு இடையே அக்னி 5 ஏவுகணை பரிசோதனை... 5,400 கி.மீ பாய்ந்து இலக்கைத் தாக்கும்!

அக்னி V
News
அக்னி V ( ட்விட்டர் )

ஒடிசா கடற்கரையிலுள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து 5,400 கி.மீ-க்கு அப்பாலுள்ள இலக்கைத் தாக்கும் `அக்னி 5’ அணுசக்தி தாங்கிச் செல்லும் ஏவுகணை சோதனை நடைபெற்றது.

இந்திய, சீன பிரச்னைக்கு இடையே அக்னி 5 ஏவுகணை பரிசோதனை... 5,400 கி.மீ பாய்ந்து இலக்கைத் தாக்கும்!

ஒடிசா கடற்கரையிலுள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து 5,400 கி.மீ-க்கு அப்பாலுள்ள இலக்கைத் தாக்கும் `அக்னி 5’ அணுசக்தி தாங்கிச் செல்லும் ஏவுகணை சோதனை நடைபெற்றது.

Published:Updated:
அக்னி V
News
அக்னி V ( ட்விட்டர் )

அருணாச்சலப் பிரதேசத்தின், தவாங் எல்லைப் பகுதியில் டிசம்பர் 9-ம் தேதியன்று சீன ராணுவப் படை அத்துமீறி நுழைந்ததாக, இந்திய ராணுவத்தினருக்கும், சீன ராணுவத்தினருக்குமிடையே மோதல் நடைபெற்றது. இது பெரும் பேசுபொருளானது. இது குறித்து உரிய பதில் அளிக்குமாறு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தின. அதைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ``சீனாவுடனான மோதலில் இந்திய, சீன ராணுவத்தினர் சிலர் காயமடைந்தனர். இருப்பினும் சீனாவின் ஊடுருவல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது" என மக்களவையில் விளக்கமளித்திருந்தார்.

அக்னி V
அக்னி V
ட்விட்டர்

சீனாவுடனான மோதல்கள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஒடிசா கடற்கரையிலுள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து 5,400 கி.மீ-க்கு அப்பாலுள்ள இலக்கைத் தாக்கும் அக்னி 5 அணுசக்தி தாங்கிச் செல்லும் ஏவுகணை சோதனை நடைபெற்றது. அந்தச் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியதாகவும், இது ஒரு வழக்கமான சோதனைதான் எனவும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏவுகணையிலுள்ள புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களைச் சரிபார்க்க இந்தச் சோதனை நடத்தப்பட்டது, மேலும் இந்த ஏவுகணை முன்பைவிட தொலைவிலுள்ள இலக்குகளை இப்போது தாக்கும் என்பதை நிரூபித்திருக்கிறது.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

அருணாச்சலப் பிரதேசத்தை திபெத்தின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா, அதை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கிறது. இதனால், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே 1962-ல் போர் நடந்தது.

இதற்கிடையே சீனாவின் எல்லையான உத்தரகாண்ட்டில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த மாதம் கூட்டு ராணுவப் பயிற்சி நடந்தது. இந்த நிலையில்தான் அருணாச்சலப் பிரதேச எல்லையில் மீண்டும் மோதல் போக்கு தொடங்கியிருக்கிறது. அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீனப் படையினருடன் மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஏவுகணை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.