Published:Updated:

`மோடி போரை நிறுத்த வலியுறுத்திவருகிறார்; ஐ.நா-வின் முயற்சிக்கு ஆதரவளிப்போம்!' - டி.எஸ்.திருமூர்த்தி

இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி

`பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடித் தீர்வுகாண வேண்டும். ஐ.நா-வின் முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம். இந்தியப் பிரதமர் போரை நிறுத்துவதற்க்குப் பலமுறை வலியுறுத்திவருகிறார்' என டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.

உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தொடங்கிய போர், முடிவுக்கு வராமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது ஏவுகணைத் தாக்குதலைத் தொடுத்துவருகிறது. இந்த நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் பேசிய ஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, ``உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியது முதல் உக்ரைன் மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். இது தொடர்பாக இந்தியா தொடர்ந்து தன் கவலையை வெளிபடுத்திவருகிறது. உள்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறிவருகின்றனர்.

உக்ரைன்
உக்ரைன்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடித் தீர்வுகாண வேண்டும். ஐ.நா-வின் முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம். இந்தியப் பிரதமர் போரை நிறுத்துவதற்குப் பலமுறை வலியுறுத்திவருகிறார். உக்ரைனிலிருந்து சுமார் 22,500 இந்தியர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதிசெய்துள்ளோம். உக்ரைனில் நிலவும் மோசமான நிலைக்குத் தகுந்தவாறு, இனி வரும் நாள்களில் உக்ரைனுக்கு மேலும் நிவாரணப் பொருள்களை அனுப்பும் பணியில் இந்தியா ஈடுபட்டுவருகிறது" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism