Published:Updated:

`இந்திய எம்.பி-க்கள் பாதிபேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள்...' - சிங்கப்பூர் பிரதமர் பேச்சு!

சிங்கப்பூர் பிரதமர்

`இந்தியாவின் மக்களவையில் கிட்டத்தட்டப் பாதி எம்.பி-க்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.' - லீ சியென் லூங்

`இந்திய எம்.பி-க்கள் பாதிபேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள்...' - சிங்கப்பூர் பிரதமர் பேச்சு!

`இந்தியாவின் மக்களவையில் கிட்டத்தட்டப் பாதி எம்.பி-க்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.' - லீ சியென் லூங்

Published:Updated:
சிங்கப்பூர் பிரதமர்

சிங்கப்பூரில் தொழிலாளர் கட்சியின் எம்.பி ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டது. அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், ``சுதந்திரத்திற்காகப் போராடி வென்றத் தலைவர்கள், பெரும் தைரியம், மகத்தான கலாசாரம் மற்றும் சிறந்த திறன் கொண்ட தலைவர்களாக வெளிப்பட்டனர்.

சிங்கப்பூர்
சிங்கப்பூர்

அவர்களில் டேவிட் பென்-குரியன்ஸ், ஜவஹர்லால் நேரு போன்றோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். பொதுவாக ஒரு நாட்டை உருவாக்கும் தலைவர்கள், தங்கள் மக்களுக்கும் தங்கள் நாட்டுக்கும் ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், தங்கள் மக்களின் உயர்ந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும் முயல்கின்றனர். ஆனால், அந்த ஆரம்ப உத்வேகத்தை, அடுத்தடுத்த தலைமுறைகள் தக்கவைத்துக்கொள்வதில்லை.

காலப்போக்கில், அரசியலின் அமைப்பு மாறுகிறது, அரசியல்வாதிகள் மீதான மரியாதை குறைகிறது. பிறகு, வாக்காளர்களும் இதுதான் விதிமுறை என்று நினைக்கிறார்கள். தரநிலைகள் சீரழிந்து, நம்பிக்கை சிதைந்து, நாடு மேலும் வீழ்ச்சியடைகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நேரு
நேரு

நேருவின் இந்தியாவில் தற்போது ஊடக அறிக்கைகளின்படி, மக்களவையில் கிட்டத்தட்டப் பாதி எம்.பி-க்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதில் பல அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றாலும், இன்னும் இந்த நிலைதான் உள்ளது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

எனவே, ஒவ்வொரு அடுத்தடுத்த தலைமுறையும், சிங்கப்பூர் மரபுரிமையாக பெற்ற அமைப்பைப் பாதுகாக்க வேண்டும். இதற்கு நாம் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும், விதிகளைச் சரியாகச் செயல்படுத்தவேண்டும், அதே விதிகளை அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்த வேண்டும், யாரும் சட்டத்திற்கு மேல் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என்றார்.