Published:Updated:

ராணுவத்துக்கு செலவு செய்வதில் ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளிய இந்தியா! - எத்தனையாவது இடம் தெரியுமா?

இந்திய ராணுவம்

2012-ம் ஆண்டிலிருந்து ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியா ராணுவத்துக்கு செலவிடும் தொகை 33 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

ராணுவத்துக்கு செலவு செய்வதில் ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளிய இந்தியா! - எத்தனையாவது இடம் தெரியுமா?

2012-ம் ஆண்டிலிருந்து ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியா ராணுவத்துக்கு செலவிடும் தொகை 33 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

Published:Updated:
இந்திய ராணுவம்

உலக நாடுகள் பலவும் ஒவ்வோர் ஆண்டும் ராணுவத்துக்குச் செலவு செய்யும் நிதியை மட்டும் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் உலக நாடுகள் ராணுவத்துக்கு 2.1 ட்ரில்லியன் டாலரைச் செலவு செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி இன்ஸ்டிட்யூட் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரியவந்திருக்கிறது. அதில் மேலும் சில தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. உலகிலேயே ராணுவத்துக்காக அதிகம் செலவு செய்வதில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்கா 801 பில்லியன் டாலர் தனது ராணுவத்துக்காக செலவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 1.4 சதவிகிதம் குறைவு. ஆனால், 2021-2022-ம் ஆண்டில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக அமெரிக்கா 24 சதவிகிதம் நிதியை அதிகரித்திருக்கிறது.

ராணுவம்
ராணுவம்

அதேபோல, அமெரிக்காவின் ஆயுதக் கொள்முதலுக்கான நிதி 6.4 சதவிகிதம் குறைந்திருக்கிறது.

இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனா, கடந்த ஆண்டில் ராணுவத்துக்காக 293 பில்லியன் டாலர் செலவிட்டிருக்கிறது. இது முந்தைய ஆண்டைவிட 4.7 சதவிகிதம் அதிகம். இந்தியா கடந்த ஆண்டு ராணுவத்துக்குச் செலவிட்ட தொகை 76.6 பில்லியன் டாலர். இது முந்தைய ஆண்டைவிட 0.9 சதவிகிதம் அதிகம். அதேசமயம் 2012-ம் ஆண்டிலிருந்து ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியா ராணுவத்துக்குச் செலவிடும் தொகை 33 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. நான்காவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து கடந்த ஆண்டு மட்டும் 68.4 பில்லியன் டாலரை ராணுவத்துக்காகச் செலவு செய்திருக்கிறது. ஐந்தாவது இடத்தில் ரஷ்யா இருக்கிறது. ரஷ்யா 65.9 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரஷ்யா
ரஷ்யா
Pixabay

கடந்த ஆண்டு எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ரஷ்யாவுக்கு வருவாய் அதிகமாக இருந்தது. எனவே, ராணுவத்துக்கு அதிகமாகச் செலவு செய்தது. 2016-2019-ம் ஆண்டில் எரிபொருள் விலை குறைவு காரணமாக ராணுவச் செலவையும் ரஷ்யா குறைத்துக்கொண்டது. ரஷ்யா இந்தியாவுக்கு ஆயுதம் சப்ளை செய்யும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.

ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கும் இந்தியா, ராணுவத்துக்குச் செலவு செய்வதில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இது குறித்து ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி இன்ஸ்டிட்யூட்டின் மூத்த ஆராய்ச்சியாளர் டியாகோ டி சில்வா, ``கொரோனா காலத்தில்கூட ராணுவத்துக்கு உலக நாடுகள் செலவிடும் தொகை அதிகமாகவே இருந்தது" என்று தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism